# கீழடி &#8211; தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி

- URL: https://www.scitamil.in/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/
- Published: 2019-09-21 · Updated: 2026-10-18

சுருக்கம்: கரிம பகுப்பாய்வின் மூலம் கண்டறிந்ததில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளத்தை காட்டுகிறது. எழுத்தறிவு பெற்ற சமூகம். …

## சுருக்கம்:

- கரிம பகுப்பாய்வின் மூலம் கண்டறிந்ததில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

- கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளத்தை காட்டுகிறது.

- எழுத்தறிவு பெற்ற சமூகம்.

- கைவினை பொருட்களில் செய்வதில் மிகச்சிறந்த தொழில்நுட்பம்.

- வளமையான பொருளாதாரத்தை கொண்ட சமூகம்.

- திறமையை வளர்க்கும் வகையில் விளையாட்டுகள்.

- உள்நாடு மற்றும் வெளிநாடு வனிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்த சமூகம்.

- கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டதின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இது வைகை நதிக்கரையில் இருந்து 11கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

## அகழ்வாராய்ச்சி:

2013 ஆம் ஆண்டு முதலில் கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டு ஐந்து நிலைகளாக நடைப்பெற்று வருகிறது. இதில் முதலில் 2014 - 2017 வரை இந்திய தொல்லியல் துறையும் அதன் பின் தமிழ்நாடு தொல்லியல் துறையும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

## கண்டெடுக்கப்பட்டவைகள்:

இதுவரை இங்கு 5,820 பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இடத்தில் சுட்ட செங்கல்லால் ஆன சுவர்கள், உறைக்கிணறுகள், பானை செய்யும் தொழில் கூடங்கள், வெறும் கையால் அமுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வடி நீர் கால்வாய்கள், கூரை ஓடுகள் போன்ற பல அமைப்புகள் கானப்பட்டன.

மேலும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், யானை தந்ததில் செய்யப்பட்ட ஆபரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், இரும்பு கருவிகள், தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புக்கள், இரத்தின கற்களால் ஆன ஆபரணங்கள், கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சுடு மண் மணிகள், வட்ட சில்லுக்கள், காதணிகள், தக்களிகள், மனித மற்றும் விலங்குகளின் வடிவில் பொம்மைகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற உடைந்த பானை ஓடுகள் மற்றும் ரோமானியா சின்னம் பொறிக்கப்பட்ட பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


_Full article for members: https://www.scitamil.in/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/_
