முடி வேகமா வளர டாப் 10 டிப்ஸ் !

முடி வேகமா வளர டாப் 10 டிப்ஸ் !

(HAIR LOSS)


முடி வேகமாக வளர எவ்விதம்மான குருக்குவழிகளும் இல்லை ஆனால் முடியை வேகமாக வளர சில இயற்கை வழிகள் உள்ளன அவற்றை இங்கு காண்போம்.

அனால் நீங்கள் முடிவளர முறையான முடி பராமரிப்பு மற்றும் உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் அடர்த்தியான மற்றும் நீளமான முடியினை பெறலாம்.


சரியான டயட் :

       முடி விரைவாக மற்றும் அடர்த்தியாக வளர்வதில் உயர் ப்ரோட்டின் ,தாதுஉப்புகள் மற்றும் வைட்டமின்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. இவற்றில் முக்கிய வைட்டமின்கலான வைட்டமின் A,B,C மற்றும் E, இரும்பு, காப்பர், மக்னிசியும், செலினியும். அதிலும் வைட்டமின் B-காம்ப்ளெக்ஸ் தான் முடி வேகமாக மற்றும் அடர்தியாகவும் நீளமாகவும் வளர பெரும் பங்குவகிக்கிறது.


      இவை மட்டுமில்லாமல் பால், தயிர், வெண்ணை, முட்டை, கோழி, முழுத்தானியங்கள், சாலமன், முட்டைகோஸ்,ஸ்பினச், பிரகோலி, அவோகாடோ, பசைபயிறு, திராட்சை, போன்ற உணவுகள் அடர்த்தியான மற்றும் மெருதுவான முடிவளர பெரும் பங்கு வகிக்கிறது.
      மீன் போன்ற உணவுகளில் உள்ள ஒமேக -3 கொழுப்பு முடிவளர தேவையான முக்கிய பொருளாக உள்ளது.

(குறிப்பாக வைட்டமின் E மற்றும் ஜின்க் குறைப்பட்டினால் முடி விரைவாக உடைந்து விடுகிறது, இதனால் முடியின் தடிமன் குறையக்கூட வாய்ப்புள்ளது) 

காஸ்ட்டர் ஆயில் :

       காஸ்டர் ஆயிலில் மிகவும் அதிகமான அளவு வைட்டமின் E மற்றும் முடிக்கு தேவையான அளவு கொழுப்புகள் உள்ளன (FATTY ACID). 
             இது அதிக அளவு பிசுபிசுப்பு தன்மை காரணமாக காஸ்டர் ஆயிலுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து இதனை 35 முதல் 45 நிமிடம் வரை தலையினை மசாஜ் செய்வதன் மூலம் முடியினை வேகமாக வளர தூண்டுகிறது.
              இதுமட்டுமில்லாமல் நீங்கள் ரோஸ்மேரி, பெப்பெர்மின்ட், லவேண்டேர் போன்றவற்றை நேரடியாக பயன்படுத்துவதால்  இது  முடியினை மிகவும் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர வழிவகை செய்கிறது.

                                     

மசாஜ்: 

வாரம் ஒருமுறை உச்சந்தலையை சூடான எண்ணெய் கொண்டு  மசாஜ் செய்வதன் மூலம் தலயில் உள்ள முடி வளரக்கூடிய மொட்டுகளை தூண்டிவிடுகிறது இதனால் முடி வேகமாக வளர ஆரம்பிகிறது.

மசாஜ் செய்யும் முறை:

  • இளம் சூட்டுடன் உள்ள எண்ணெய்யை முடியின் மீது மெதுவாக தடவவும் .
  • தடவிய பிறகு கைவிரல்களால் உச்சந்தலையை வட்ட வடிவில் 4 முதல் 5 நிமிடம் வரை  மசாஜ் செய்யவும்.
  • மீதமுள்ள எண்ணெய்யை தலையில் இருந்து வழித்துவிடவும். 

 மேலிருந்து கீழாக தலைமுடியை வைத்தல் :

மேலிருந்து கீழாக தலைமுடியை வைப்பது என்பது மிகவும் பிரபலமான ஒரு முறையாகும்.இவ்வாறு தலைகீழாக முடியை வைப்பதன் மூலம் அது முடியை நீளமாக வளர வழிவகை செய்கிறது.


அழுத்தம் இன்றி வாழ்தல் :

பெரும்பாலும் முடி உத்திர முக்கிய காரணமாக இருப்பது வேலைப்பளுவும் அழுத்தமும் தான், இதனைத் தவிர்க்க தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதன்மூலம் தவிர்க்க இயலும்.


முட்டை மாஸ்க் (EGG MASK):

முட்டை மாஸ்க் மாதம் ஒருமுறை செய்வதன்மூலம் முடிவளர்ச்சி அதிகமாகிறது, பொதுவாக முறையில் அதிகளவு ப்ரோடீன் மற்றும் இரும்பு சல்பர், செலினியும் போன்ற தாதுப்பொருட்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது இது முடிவளர இன்றியமையாத ஒரு பொருளாக உள்ளதால் முட்டை மாஸ்க் முக்கியப்பங்கு வகிக்கிறது.
Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post