உங்களுக்கு 35 வயசு ஆய்டுச்ச? இதை கண்டிப்பா பண்ணுங்க குறிப்பாக பெண்கள்


Image result for red blood cells


      40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டால் அவர்களுக்கு எடுக்கப் படும் முதல் டெஸ்டுகளில் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது HB count என்று சொல்லப்படக்கூடிய இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கைகளுக்குத் தான்.

1 டெஸிலிட்டர் ரத்தத்தில்;
 • பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
 • ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

    இந்த எண்ணிக்கை சில பெண்களுக்கு மிகக் குறைவாக அமைந்து விட்டால் அவர்களை எவ்விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் உட்படுத்தமுடியாது. அத்தகையவர்களை மருத்துவர்கள் ஹீமோ குளோபின் அதிகமிருக்கும் உணவு வகைகளைச் சாப்பிடச் சொல்லியும் இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குகளையும், மாத்திரை மருந்துகளைச் சாப்பிட்டு ரத்தத்தில் சிவப்பு அணுக்களான ஹீமோ குளோபின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வரச் சொல்லி பரிந்துரைப்பார்கள். பொதுவாக இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குகளை உட்கொள்ளும் போதும் சரி, மாத்திரைகளை உட்கொள்ளும் போதும் சரி நிறையத் தண்ணீர் அருந்த வேண்டும். அல்லது நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு மலச்சிக்கல் அவஸ்தை நேரும்.
அதனால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் வெறும் மாத்திரை, மருந்துகளை நம்பி மட்டுமே தங்களது சிவப்பணுக்கள் எண்ணிக்கையை உயர்த்துவதைக் காட்டிலும் இயற்கையாகவே இரும்புச் சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், கீரைகள் உள்ளிட்ட உணவு வகைகளை அன்றாடம் தங்களது சப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் சிவப்பணு எண்ணிக்கையும் உயரும் மலச்சிக்கலில் இருந்தும் தப்பலாம். அந்த வகையில் பெண்கள் தங்களது உடலில் சராசரி ஹீமோ குளோபின் அளவை பராமரிக்க தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பொருட்களை கீழே பட்டியலிட்டுள்ளோம். பாட்டி, அம்மா, அத்தை, சித்தி, பெரியம்மா, அக்கா, அண்ணி, நாத்தனார், மாமியார், தங்கை, தோழி என எந்த உறவு நிலையில் இருக்கும் பெண்களென்றாலும் சரி அவர்கள் அனைவருக்கும் மறக்காமல் இந்த உணவுப் பட்டியலைத் தெரியப்படுத்தி தினமும் சாப்பிடச் சொல்லி அறுவுறுத்துங்கள். அப்புறம் ஹீமோகுளோபின் எண்ணிக்கை எப்படிக் குறையும் என்று ஒரு கை பார்க்கலாம்.
ரத்தத்தில் ஹீமோ குளோபின் (hemoglobin) எண்ணிக்கையை உயர்த்தும் உணவுகள்
 • முருங்கைக்கீரைசுண்டைக்காய் (காயாகவும், வற்றல் செய்தும் உணவில் சேர்க்கலாம்.)
 • சிவப்பு முக்கடலை (நாட்டு முக்கடலை)
 • பாசிப்பயறு (அவித்தோ முளைகட்டியோ சாப்பிடலாம்)
 • மணத்தக்காளி வற்றல் 
 • எள்ளுருண்டை
 • அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை,
 • கருப்புத் திராட்சை (விதை நீக்கியது அல்ல),
 • நாட்டு மாதுளை, 
 • நாட்டுப் பேரீட்சை
 • கறிவேப்பிலைத் துவையல்
 • பீர்க்கங்காய் (இதை குழம்பு, பொரியல், கூட்டு, துவையல் எனப் பலவிதமாகப் பயன்படுத்தலாம்)
 • பிரண்டை (புளி சேர்த்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம்)
 • முள்ளங்கி (சாறு எடுத்தும் சூப் செய்தும் அருந்தலாம், பொரியல், அவியல் செய்தும் சேர்க்கலாம்)
 • பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி
 • உளுந்து, கேழ்வரகு தோசை,பொன்னாங்கன்னி கீரைதண்டுக்கீரை அல்லது முளைக்கீரைவெள்ளாட்டுக்கறி, 
 • ஈரல், 
 • எலும்பு சூப், 
 • மலைநெல்லிக்காய்ச் சாறு, 
 • பழரசம், 
 • பனைவெல்லப் பாகில் புரட்டிய சிறு தானிய மாவுருண்டை

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post