பழைய சாதம் சாப்பிடுபவரா நீங்கள்! அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க !

அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் பழைய சாதம்..!

Image result for பழைய சாதம் சமையல்


வைட்டமின் பி 6 மற்றும் பி 12 அதிகமாக உள்ள பழைய சோறு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஆனால் இப்போது நாம் அதை மறந்து விட்டோம் என்பதுதான் உண்மையிலும் உண்மை.

அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். இப்போது கிராமங்களில் கூட காண முடிவதில்லை. பழைய சோறு என்றாலே முகத்தை திருப்பிக் கொள்கிறோம்.

ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. விர சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பன்றி காய்ச்சல் உட்பட.

Related image

காலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறுநாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும். இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லாமல் காலையில் ஃபிரியா போலாம்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறைந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது.

அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகி விடும்.

Comments

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!