Image result for வெங்காயம்


முதலில் வெங்காயத்தின் பலன்களைகாண்போம் :

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
  • பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
  • பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
  • யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.
  • முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.
  • எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா?உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.
  • சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.
  • புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.
  • முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.
  • வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.


பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். 

உயிருக்கே உலை வைக்கும் வெங்காயம் !:

வெங்காயத்தில் எவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளதோ அதைப் போல் அதில் அந்தளவுக்கு தீமையும் நிறைந்துள்ளது.

Related image

சிற்றுண்டி நிலையங்களில் பயன்படுத்தபடும் வெங்காயம் :
   
பொதுவாக சிற்றுண்டி நிலையங்களில் பயன்படுத்தப்படும் வெங்காயம்கள் அவ்வப்போதே வெட்டி உபயோகப்படுத்தப் படுத்தப்படுவதில்லை, அதிகம் மக்கள் அவ்வப்போது வந்துகொன்ன்டே இருப்பதன் காரணத்தால் சிற்றுண்டி நிலையங்களில் வெங்காயத்தை முன்னதாகவே வெட்டி வைத்துக்கொண்டு அதனை பயன்படுத்துகின்றனர் இதனால் அவர்களுக்கு  வேலை பளு குறைகிறது, அதுவே நமக்கு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்பது நம்மில் நிறையபேருக்கு தெரிவதில்லை .

Related image


வெங்காயம் தன சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளைத் தன்னை நோக்கி இழுக்கும் ஆற்றல் கொண்டது.  இதனால் கிருமிகளின் வாழ்விடமாக வெங்காயம் மாறிவிடிகிறது. இதனை தடுக்க ஒரே வழி வெங்காயத்தை உடனே உபயோகிப்பது தான்.

காலன், பாணி பூரி போன்ற உணவுகளை உண்ணும்போது  இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் காணப்படுகிறது.

Image result for பானிபூரி

சிற்றுண்டி நிலையங்கலுக்கு செல்லும்போது இனி வெங்காயத்தை கேட்டு வாங்கி உடலை நோய்களுக்கு விற்றுவிடாதீர்கள்.
  

Post A Comment:

0 comments:

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!