டாப் 6 இயற்கை அழகுக் குறிப்புகள் | Natural Beauty tips

தினமும் வேளை வேளை என்று ஓடும் உங்களுக்கு உங்கள் முகத்தைக்கூட கவனிக்க மறந்த உங்களுக்கு நாங்கள் 15 (௧௫) நிமிடத்தில் உங்களுக்கு நீங்க இழந்த பொலிவை விட பலமடங்கு அதிக பொலிவை அளிக்கும் அழகுக் குறிப்புகள் கீழே கொடுத்துள்ளோம்.
6. பேஸ் மாஸ்க் 

பௌண்டேசென்காக (foundation) அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து 15 நிமிடம் ஒதுக்கி இந்த மாஸ்க்குக்கு நேரம் ஒதுக்கினால் போதும் உங்களின் இழந்தப் பொலிவை மீண்டும் பெற உதவும்.

இது உங்களின் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை குறைத்து முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை குறைக்க உதவும்.

செய்முறை: 
ஒரு கிண்ணத்தில் 2 முதல் 3 கரண்டி பாலை  எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கரண்டி ஜெலாட்டின் சேர்த்துக்கொள்ளுங்கள் ( இது சூப்பர் மார்க்கெட்டில் பவுடராக கிடைக்கும் ). இந்த கலவையை நன்றாக கலந்து 30 நிமிடம் மைக்ரோ வேவில் வைத்து எடுக்கவும். இந்த கலவை சற்று க்ரீம் மாதிரி ஆனதும் முகத்தில் போட்டு (15 min ) பின் அதனை எடுத்துவிடவும். 

5. கரும்புள்ளிகளை 15 நிமிடத்தில் அகற்ற

மூக்கின் மீது காணப்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை அகற்ற தேனுடன் லவங்கப்பட்டையை நன்றாக பொடி செய்து அதை பேஸ்ட் வடிவத்தில் குழப்பிக் கொள்ளவும்.
குழப்பிய கலவையை சிறிய காட்டன் துணி அல்லது பட்ஸ் மூலம் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில தேய்த்து 5 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவிவிடவும்.


4. எளிய பேஸ் மாஸ்க் 

நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த மாஸ்க் செய்யலாம்.

சோர்ந்துப் போன  தோளுக்கு: அப்பிள் சாறுடன் தேனைக் கலந்து ஒரு மெல்லியப் படலமாக முகத்தில் அப்பி 5 நிமிடம் அப்படியே விட்டுவிட்டால் சோர்ந்துப் போன  தோள் சரி ஆகிவிடும்.
எண்ணெய் வடியும் முகத்திற்கு : முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து அதனுடன் கொஞ்சம் எலுமிச்சை சாரும் 2 முதல் 3 துளிகள் விட்டு முகத்தில் தடவ வேண்டும்.

3. நீளமான முடிக்கு கர்லிங் செய்வது:

நீளமான முடிக்கு கர்லிங் செய்தால் தான் அவர்களுக்கு அழகு கூடும் என்பது இன்றிய தலைமுறைப் பெண்களின் கருத்து இதற்கு முடியை நீளமாக சுருட்டி  strightner உபயோகிப்பதால் சரி ஆகி விடும் 


2. முடியை முடித்து விடுதல் 

நீங்கள் அதிக நேரம் முடிக்கே நேரத்தை செலவு செய்யாமல் இவ்வாறு முடியை முடித்து விட்டு கூட நீங்கள் வெளியில் செல்லலாம் இதுவும் இப்போது பிரபலமான ஒன்றாக பெண்களிடம் காணப்படுகிறது. இதற்கு 5 நிமிடம் கூட ஆகாது.
1. பவுடர்

பவுடர் தான் மிகவும் எளிய மற்றும் சீக்கிரமாக முகத்தைப் பொலிவு பெற வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூட சொல்லலாம். உண்மையில்  திஸ்சு மூலம் பவுடரை முகத்தில் போடும்போது சற்று அதிகமாக முகம் பொலிவுடன் காணப்படும். முகம் பொலிவடைய வேண்டுமா?


1. ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி , அரை மணி நேரத்துக்கு பின் கழுவவும்.

2. தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின் கழுவுவதும் முகத்துக்கு பொலிவைத் தரும்.

3. முகத்திலுள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு பரு மீது வைத்தால்,அது அப்படியே அமுங்கிவிடும்.

4. முகத்தை அடிக்கடி ப்ளீச்சிங் செய்வது சரியானதல்ல. ஏனெனில் சிலவிதமான ப்ளீச்சிங்கில் அடங்கியுள்ள அமோனியா போன்ற ரசாயனப் பொருட்கள் முக சருமத்துக்கு கேடு விளைவிக்கக்கூடும். குறிப்பாக முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒவ்வாமையை விளைவிக்கும். மேலும் ப்ளீச்சிங் அதிகமானால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படவும் காரணமாகிறது.


5. அடிக்கடி முகத்தை கழுவுவதனால்,முகச் சருமத்தின் இயல்பு மாற்றமடையக்கூடும். குறிப்பாக சோப்பு உபயோகித்து இப்படிக் கழுவுவதால், சோப்புகளில் உள்ள காரத் தன்மை சருமத்தை வறட்சிக்குத் தள்ளிவிடும்.

6. எண்ணெய் மயமான சருமம் உடையவர்கள் முகம் கழுவும்போது பச்சைப் பயறு மாவு உபயோகிப்பது நல்லது. இரவு உறங்கச் செல்லும் முன்னர் முகத்தை சுத்தமாகக் கழுவுவது நல்லது. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில், முகப் பருக்கள் ஏற்பட சாத்தியம் அதிகம். தினமும் அல்லது அடிக்கடி முருங்கைக்கீரை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பொரித்த மற்றும் வறுவல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கட்டாயமாக முகம் கழுவ சோப்பை உபயோகிக்கக்கூடாது. பயத்தமாவு அலல்து கடலைமாவு உபயோகித்து முகம் கழுவவேண்டும்.


7. நமது தோற்றத்துக்கு முதிர்ச்சி ஏறாமல் தவிர்த்து நம்மைப் பாதுகாப்பது ஆன்டி ஆக்ஸிடென்டுகளாகும். மிகவும் முன்னதாகவே ஏற்படும் முதிர்ச்சி, முகத்தின் சுருக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த ஓர் அளவுக்கு இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளால்தான் இயலும். ஆப்பிள், ஆரஞ்சு, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி கேரட், பூசணி மற்றும் கீரைவகைகள் ஆகியவற்றிலும் இவை அதிகம் காணப்படுகிறது. இவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பானது. பத்து அல்லது பன்னிரண்டு டம்ளர் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும். சருமத்தின் பளபளப்புக்கு தண்ணீர் மிக அவசியமானது.

8. சிலருக்கு சருமம் வறட்சியாக இருக்கும். சோப்புகளை அடிக்கடி மாற்றுவது சருமத்தின் வளர்ச்சியைக் கூட்டக்கூடும். இவர்கள் அரிசிமாவு, பால், கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை கலந்துமுகத்தில் பூசிக் கொள்வதால், வறட்சியைத் தடுக்கலாம். குளித்து முடித்ததும் ஒரு மாய்ச்சரைஸர் உபயோகித்து உடல் முழுவதும் மசாஜ் செய்வதும் வறண்ட சருமத்துக்கு நல்லது


Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post