மின்கலனின்றி காந்தத்தின் மூலம் மின்சாரம் எவ்வாறு எடுப்பது? | SCITAMIL


பொதுவாக மின்சாரம் அணு மின் நிலையங்களிலும் அனல் மின் நிலையங்களிலும் இருந்து தான் நாம் பெறுகிறோம். சில பகுதிகளில் காற்று மற்றும் நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

பல மின் நிலையங்களில் மின் ஆற்றல் நகரும் காந்தங்கள் உதவியுடன் Kinetic power , மற்றும் காந்த சக்தியை மின்சாரமாக மாற்றுகிறது.

அதாவது கம்பிச்சுருளின் வழியே காந்த புலன்கள் செல்லும்போது அதில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.இவற்றைக் கொண்டு நிறைய அறிவியல் 
சாதனங்களை செய்ய முடியும். அவற்றில் இங்கு எவ்வித பாட்டரிகளும் இன்றி காந்தத்தினை கொண்டு மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்வது என்று காண்போம்.
Read also: How magnetic Trains work (MAGLEV)

தேவையான பொருட்கள் :

  • 1/4 காப்பர் கம்பி 
  • உப்பு அட்டை 
  • கத்தரிக்கோல் 
  • பென்சில் 
  • சிறிய சக்திவாய்ந்த காந்தம் 
  • LED பல்பு (2.5 volts கீழ் )
  • 35 mm பிலிம் அட்டை அல்லது சிறிய உருளை 
  • டேப் 
  • காகித அட்டை

செய்முறை:

முதலில் காப்பர் கம்பியை சுற்றுவதற்கு ஒரு பிடிமானம் செய்ய வேண்டும் அதற்கு நாம் ஒரு சிறிய அளவுள்ள பிலிம் உருளை அல்லது வேறு ஏதேனும் ஒரு உருளை போன்ற அமைப்புள்ள பொருளை எடுத்துக்கொள்ளுங்கள்.


பிறகு ஒரு பெரிய காகித அட்டையை எடுத்துக்கொண்டு அதில் நீங்கள் எடுத்த உருளையின் அளவை வரைந்துக் கொண்டு அந்த அளவை விட சற்று பெரிதாக மற்றொரு வடத்தினை வரைந்துக் கொண்டு அதனை கத்தரிகோல் மூலம் தனியாக வேடிகொள்ளுங்கள்.வட்டமாக வெட்டப்பட்ட காகித அட்டையை உருளையின் இருபுறமும் மாட்டிக்கொள்ளுங்கள். அது நகராத படி இருபுறமும் ஏதேனும் ஒரு கம் மூலம் ஒட்டி விடுங்கள். அதன் பின் காப்பர் கம்பியை சிறிது வெளியே வீட்டு உருளையை சுற்ற ஆரம்பியுங்கள். 


சுற்றிய பின்பு காப்பர் கம்பியின் இரு முனைகளையும் உப்பு அட்டையைக் கொண்டு சுத்தம் செய்து LED  பல்புடன் இணைத்து விடுங்கள். கவனம்:
காப்பர் கம்பி நகரா வன்னம் இருபுறமும் டேப் கொண்டு ஒட்டிவிட வேண்டும்.பல்பை இணைத்த பிறகு உருளையின் உட்புறம் சிறிய காந்தத்தினை வைக்க வேண்டும்.நீங்கள் வைத்திருக்கும் கந்தம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தால் உங்களுக்கு கிடைக்கும் ஒளியின் அளவும் அதிகமாக இருக்கும் .


மேலும்:
அதிக சக்தி வாய்ந்த காந்தம் மற்றும் அதிகளவு காப்பர் கம்பியின் சுற்று இரண்டும் ஒளியின் அளவை அதிகரிக்கும்.
       

அதிகம் வாசித்தவைகள் திறக்க
உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டுபிடிப்பது எவ்வாறு ? வாசிக்கவும்
விண்வெளியில் மனிதர்களின் உயரம் அதிகரிக்கும்? வாசிக்கவும்
மின்கலனின்றி காந்தத்தின் மூலம் மின்சாரம் எவ்வாறு எடுப்பது? வாசிக்கவும்
ஏவுகணைகள் செயல்படும் விதம் வாசிக்கவும்
நீர்மூழ்கிக் கப்பல் எவ்வாறு மூழ்கியபடியே வெகுதொலைவு செல்கிறது ? வாசிக்கவும்
மாவிலை தோரணம் ஏன்? வாசிக்கவும்
தீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா?| வாசிக்கவும்

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post