இதோ! இரவில் தூங்கும்போது ஏன் செல்போன்களை அருகில் வைக்கக்கூடாது என்பதற்கான காரணம்

ரவில் தூங்கும்போதும் செல்போன்களையும் அருகில் வைத்து தூங்குவது என்பது தற்போது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் யாரும் இதுவரை நினைத்துக் கூட பார்த்தது இல்லை. 

இரவில் உறங்கும்போது ஏன் செல்போன்களை அருகில் வைக்கக்கூடாது?

செல்போன்களில் நாம் ஒரு செய்தி அனுப்பவேண்டும் அல்லது நாம் யாரையாவது தொடர்பு கொள்ளவேண்டும் என்று நினைக்கும்போது செல்போன்களில் இருந்து முதலில் அலைவரிசைகள் (சிக்னல்கள்) நமக்கு அருகில் உள்ள டவருக்கு சென்று பிறகு தான் அது இரண்டாவது நபரை அடையும்.

இவ்வாறு செல்லும் சிக்னல்கள் 900 MHz கும் அதிகமாக இருப்பதால் மனிதர்களுக்கும் நம்மை சுற்றி உள்ள பல உயிரினகளுக்கும் பாதிப்புகளை ஏற்ப்படுத்துகிறது.
Read also : இன்றே புகைப்பதை நிறுத்தினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ? 👀 4.3k views

மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:


  • செல்போன்கள் ரேடியோ அலைவரிசைகளை பயன்படுத்துவதால் இது மூளையை பாதித்து மூலை புற்றுநோய் ஏற்படும் பாதிப்புகளை அதிகரிக்கிறது.
  • இதே ரேடியோ அலைகளால் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைபாட்டை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • செல்போன்களின் திரையில் இருந்து வெளியே வரும் நீலக் கதிர்கள் பகலில் உள்ள வெளிச்சத்தில் காணப்படும் கதிர்களும் ஒன்று என்பதால் நமது கண்கள் அதனை பகலாகவே உணர ஆரம்பிக்கும் இதனாலவே இரவில் தூக்கமின்மை ஏற்படுகிறது.
  • WHO -ன் கூற்றின்படி செல்போன்கள் மனிதர்களிடம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
  • செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் உடலில் பாடும்போது நமது உடலில் அன்றாட தேவைக்கு உற்பத்தியாகும் ஹார்மோன்களின் அளவை குறைப்பதாக கண்டறிந்துள்ளனர்.

இதில் இருந்து நம்மை காக்க நாம் செய்ய வேண்டியது:


SCITAMIL
  • தலையணை மற்றும் நாம் தூங்கும் அறையில் இருந்து 10 அடி தூரத்தில் செல்போன்களை வைக்கவேண்டும்.
  • கம்பியில்லா ஹெட் போன்களுக்கு பதில் வயர்களுடன் கூடிய ஹெட் போன்களை பயன்படுத்துவது.
  • நெடு நேரம் யாருடனாவது பேச விரும்பினால் தொலைபேசியில் அவர்களுடன் உரையாடலாம்.
  • இரவில் தூங்கும் முன் செல்போன்களை Flight Mode -ல் வைத்து தூங்க செய்யலாம்.
  • மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் சைனா செல்போன்களை வாங்குவதை தவிர்க்கவும் ஏனெனில் அதில் அதிகளவு காரியம் இருப்பதால் அதிகளவு கதிவீச்சுக்கள் நம்மை சுற்றி இருக்கும்.   

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post