டெப்லான் அற்ற மாற்று பொருட்களை பயன்படுத்துவது நன்மை பயக்கும். எவர்சில்வர் பாத்திரங்கள். இரும்பு பத்திரங்கள். மண் பானை, மண் சட்டிகள். மர அல்லது தேங்காய் ஓட்டு கரண்டிகள். இரத்த சோகை உள்ளவர்கள் நான்-ஸ்டிக் தோசை கல்லுக்கு பதில் இரும்பு கல்லை பயன்படுத்துவதால் இயற்கையான இரும்பு சத்து கிடைபதாக ஆராய்சிகள் கூறுகிறது.
nonstick-panes-health-issue-scitamil

நான்-ஸ்டிக் பாத்திரங்களை உபயோகத்தில் என்பது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நகரத்தில் வாழும் இன்றைய தலைமுறையினர்  இரும்பு பாத்திரங்கள் அல்லது எவர்சில்வர் பாத்திரங்களை தவிர்த்து அழகுக்காகவும், பாத்திரங்களை சுத்தம் செய்ய எளிமையாக இருப்பதாலும் நான்-ஸ்டிக் பாத்திரங்களையே விரும்புகின்றனர்.

அவ்வாறு நாம் உபயோகிக்கும் நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள வேதி பொருட்களை பற்றி இங்கு காண்போம்.

நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஒட்டாமல் இருக்க முக்கிய காரணம் அதன் மேல் பூசப்பட்டுள்ள டெப்லான் (Teflon) மற்றும் பாலி-டெட்ரா-ப்ளுரோ-எத்திலின் (PTFE) ஆகும்.

டெப்லான்:
nonstick-panes-health-issue-scitamil

 • டெப்லான் மற்றும் PTFE இரண்டுமே ஒன்று தான். 
 • டெப்லான் தனித்து புற்றுநோய்களை உருவாக்குவது இல்லை,   அதாவது குறைந்த வெப்பநிலையில் டெப்லான் எதனுடனும் வினைபுரிவதில்லை.  
 • ஆனால் அதிக வெப்பநிலையில் அதாவது பாத்திரங்களை அதிக சூட்டில் (570F/300டிகிரி-ல்) வைக்கும் போது டெப்லான் உறிந்து உணவு பொருட்களுடன் கலக்கும்போது   நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

கருத்துக்கள்:

 • International Agency for Research on Cancer (IARC) -ன் கருத்துப்படி இதனால் கிட்னி செயலிழப்பு, மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகளை ஏற்ப்படுதுவதாக கண்டறிந்துள்ளனர்.
 • Environmental Protection Agency (EPA) -ன் கருத்துப்படி இது மனிதர்களிடம் என்ன விதமான பாதிப்புகளை ஏற்ப்படுத்துகிறது என்று கண்டறிய முடியவில்லை என்றும் ஆனால் விலங்குகளில் இது புற்றுநோய் ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளனர்.

முடிவுகள்:

 • தற்போது மனிதர்களில் டெப்லான் பூச்சுகளால் ஃப்ளு ஏற்படுவது மட்டுமே உறுதியாகி உள்ளது. எனவே நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதிக சூட்டில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நோய் பாதிப்பில் இருந்து நம்மை காக்க செய்யவேண்டியது:

 • நான்-ஸ்டிக் பாத்திரங்களை இரும்பு நரம்புகளைக் கொண்டு சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்த்து தேங்காய் நார் அல்லது செயற்கை நார்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
                                              nonstick-panes-health-issue-scitamil
 • அதிக சூட்டில் அல்லது வெறும் பாத்திரத்தை வைத்து சூடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
 • பாத்திரத்தில் அதிகளவு கோடுகள் இருப்பின் அதனை சீக்கிரமாக மாற்றுவது நல்லது.
 • பாத்திரங்களை சூடு செய்யும்போது அதில்லிருந்து வெளியேறும் புகை மற்றும் வாயுக்களை சரியான வேண்டிலஷன் முறையில் வெளியேறுவதன் மூலம் சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மாற்று பொருட்கள்:

டெப்லான் அற்ற மாற்று பொருட்களை பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
 • எவர்சில்வர் பாத்திரங்கள்.
 • இரும்பு பத்திரங்கள்.  
 • மண் பானை, மண் சட்டிகள்.
 • மர அல்லது தேங்காய் ஓட்டு கரண்டிகள். 
  nonstick-panes-health-issue-scitamil
இரத்த சோகை உள்ளவர்கள் நான்-ஸ்டிக் தோசை கல்லுக்கு பதில் இரும்பு கல்லை பயன்படுத்துவதால் இயற்கையான இரும்பு சத்து கிடைபதாக ஆராய்சிகள் கூறுகிறது.
 மூலதனம்:
 1. அமெரிக்கன் புற்றுநோய் சங்கம் .
 2. Health line (Teflon and PFOA Exposure)

Post A Comment:

1 comments:

 1. A nonstick cookware set comes with different types of coatings, layers of coating, whether the cookware set is PFOA free or not, and many other important things.

  ReplyDelete

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!