#Headache #WHO #Remedies #Sci-Tamil
![]() |
தலைவலி |
இன்று தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கேட்டால் அதற்கு பதில் கூற இயலாது, அவ்வளவு காரணிகள் தலைவலியை ஏற்படுத்துகிறது. ஆனால் தற்போது நாகரீக வளர்ச்சியாலும், மாறுபடும் உணவு முறைகள், வேலை பளு, நிம்மதியின்மை, போன்ற பல பிரச்சனைகளால் தலைவலி பெரும்பாலும் ஏற்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தின் படி உலகில் உள்ள இளைஞர்களில் பாதி இளைங்கர்களுக்கு தலைவலி ஒரு தீராத பிரச்சனையாகவே உள்ளது.
முதல் வகை தலைவலி:
1.ஒற்றை தலைவலி
2.பதற்றத்தால் ஏற்படும் தலைவலி (TTH)
3.கொத்து அல்லது கிளஸ்ட்டர் தலைவலி (CH)
4.அதிகப்படியான மருந்துகள் எடுப்பதால் ஏற்படும் தலைவலி (MOH)
ஒற்றை தலைவலி பரவலாக காணப்படும் தலைவலி வகையாகும். இது பெரும்பாலும் பருவமடைந்த பெண்களை பாதிக்கும் அதாவது இரண்டில் ஒரு பெண்ணுக்கு இந்த வகை தலைவலி காணப்படுகிறது காரணம் அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாறுபாட்டால் இந்த தலைவலி ஏற்படுகிறது.
இது 35 முதல் 45 வயது உள்ளவர்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வகையான தலைவலி மூளையின் உள் பக்கத்தில் இருந்து தூண்டப்பட்டு தலையில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் வலியை உருவாக்குவதால் ஏற்படுகிறது. கிளஸ்ட்டர் வகை தலைவலி இளம் பருவத்தினரிடம் காணப்படும் தலைவலி ஆகும். 1000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இது காணப்படும்.
இரண்டாம் வகை தலைவலி:
இரண்டாம் வகை தலைவலிகள் என்பது ஏதேனும் உடலில், நரம்புகளில் அல்லது தலையில் ஏற்பட்ட பாதிப்பின் வினையாக இவை ஏற்படும். பொதுவாக இரண்டாம் வகை தலைவலி ஏற்பட காரணம்
1.மது அருந்துவது
1.மது அருந்துவது
2.மூளை கட்டி
3.இரத்த நாளத்தில் அடைப்பு
4.மூளையில் இரத்த கசிவு
5.அதிகளவு கார்பன் மோனாக்சைடு சுவாசித்தல்
6.உடல் வறட்சி
7.குளுக்கோமா
8.ஃப்ளு
9.பற்சொத்தை
10.அதிகளவு மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்
11.வலிப்பு
12.அதிர்ச்சி
3.இரத்த நாளத்தில் அடைப்பு
4.மூளையில் இரத்த கசிவு
5.அதிகளவு கார்பன் மோனாக்சைடு சுவாசித்தல்
6.உடல் வறட்சி
7.குளுக்கோமா
8.ஃப்ளு
9.பற்சொத்தை
10.அதிகளவு மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்
11.வலிப்பு
12.அதிர்ச்சி
தலைவலியை நேரம் கடத்தாமல் மருத்துவரை அணுகவேண்டியது மிகவும் கட்டாயமாகும். இல்லையேல் அது பலப் பிரச்சனைகளை வழிவகுக்கும்.
அண்டார்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகவும் பெரிய சிலந்தியும் அதன் வித்தியாசமான சுவாசமும்
மருத்துவம்:
1.இஞ்சி, பால், நல்லெண்ணெய் போன்றவற்றை சமளவில் எடுத்துக்கொண்டு இளஞ்சூட்டில் காய்ச்சி வாரம் ஒருமுறையேனும் தலையில் தடவி குளித்துவர தலைவலி பிரச்சனை குறையும்.
உறங்கும் முன் அருகில் வைக்க வேண்டிய எலுமிச்சை துண்டுகளும் அதன் காரணமும்
தலைவலியை தூண்டும் உணவுகள்:
1.நாளடைந்த பாலாடைக் கட்டி.
2.அதிகப்படியான தேனீர் (நாளுக்கு இரண்டு கப்புக்கு மேல் கூடாது ).
3.உப்பில் ஊறவைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்.
4.அத்திப்பழம், திராட்சை, பப்பாளி, வெண்ணெய், சிவப்பு பிளம்ஸ் (ஒரு நாளைக்கு 1/2 கப்புக்கு மேல் கூடாது).
5.ஆரஞ்சு குடும்ப பழங்கள்.
6.பிஸ்சா7.மது வகைகள்
8.புளிப்பான கிரீம்கள்.
0 Comments
தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!