உலகை கலக்கும் சாம்சங்கின் புதிய 5G சிப்புக்கள் அதன் நன்மை தீமைகள் | Exynos 5100

சாம்சங் (SAMSUNG):

சாம்சங் நிறுவனம் தென்கொரியாவின் மிகப்பெரிய பன்னாட்டு குழுமம் ஆகும். இது தென்கொரியாவில் உள்ள சாம்சங் என்ற இடதில் அமைந்துள்ளது. உலகில் 173.4 பில்லியன் ஆண்டு வருமானமாக கொண்ட ஒரு மிகப்பெரிய நிறுவனம் சாம்சங் ஆகும்.

5G சேவை 

5G சேவை:

5 ஆம் தலைமுறை இணைய சேவை 2018 ஆம் ஆண்டில் இருந்து ஆய்வில் இருந்த நிலையில் இந்த ஆண்டில் அது மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்துள்ளது. 5g சேவை உடைய செல்போன்கள் முதன் முறையாக தென் கொரியாவில் சாம்சங் இந்த மாதம்  அறிமுகப்படுத்தியது.

5G

5G சிப்புக்கள்:

சாம்சங் நிறுவனம் 5G சேவைக்காக புதிய சீப்புகளை (சைனோஸ் 5100 ) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிப்புகள் மிகவும் குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுதி அதி வேகமாக இணைய சேவையை பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளனர்.  சாம்சங் நிறுவனத்தின் சைனோஸ் 5100 சிப்புகள்  1.256 Gbps  என்ற வேகத்தில் பதிவுகளை தரவிறக்கம் செய்யும்  வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வேகம் நாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். 

5G சேவையின்   உச்ச கட்ட வேகம் 2 Gbps ஆகும்.சிறப்பம்சம்

Must Read:வயிற்றில் முட்டையுடன் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த சிட்டுக்குருவி வகை பறவை இனம்  கண்டுபிடிப்பு 

சிறப்பம்சங்கள்:

 • சைனோஸ் 5100 சிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
 • இவை 6 GHz மற்றும் 6 Gbps  என்ற வேகத்தில் மில்லி மீட்டர் அலை வரிசைகளை பயன்படுத்துகிறது.
 • வேகதிற்க்கு ஏற்ப இந்த சிப்புகள் தானாகவே தான் எந்த விதமான அலைவரிசையை பயன்படுத வேண்டும் என்பதை தீர்மானிக்கும் திறன் கொண்டவையாகும்.
 • இதன் மூலம் மிகவும் அதிக தகவல்களை குறைந்த நேரத்திலும் குறைந்த மின்சாரத்திலும் தரவிறக்கம் செய்ய இயலும்.
 • 5G NR முதல்  2G (GSM/CDMA), 3G (WCDMA, TD-SCDMA, HSPA), 4G (LTE-FDD /LTE-TDD)  வரை அனைத்தையும் கொண்டுள்ள ஒரு புதிய சிப் இந்த சைனோஸ் 5100 ஆகும்.
 • இது ஒரு 10 நானோ மீட்டர் அளவுள்ள சிப் ஆகும்.

VR 

5G-யின் நன்மைகள்:

5G சேவை இன்றைய இணைய உலகிற்கு ஒரு இன்றியமையாத ஒன்றாகும்.
 • மிகவும் வேகமாக இயங்கும் என்பதால் கணினி, வாகனங்கள், மற்றும் பல ஆளில்லா விமானங்களை எவ்விதமான இடர்பாடும் இல்லாமல் நாம் செல்போன் மூலமே இயக்க முடியும்.
 • கல்வி துறையில் ஒரு மாணவன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கூட பாடங்களை எவ்விதமான நேர இடைவெளியும் இல்லாமல் நேரடியாக வகுப்புகளை கவனிக்க இயலும்.
 • மருத்துவ துறையில் மருத்துவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மிகவும் சுலபமாகவும் தெளிவாகவும் இயந்திரங்களை இயக்கி அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
 • மிகவும் வேகமாக செயல்படுவதால் மிகவும் எளிதாக விண்வெளிக்கு தகவல்களை அனுப்பவும், வெளியில் உள்ள வேற்று கிரகங்களை நேரலையில் காணவும் முடியும்.
Must Read: அதிவேக இணைய சேவைக்காக 3236 செயற்கை கோள்களை ஏவும் அமேசான் நிறுவனம்

தீமைகள்:

 • 5G மிகவும் புதிரான ஒரு தொழில்நுட்பமாகவே உள்ளது, இதன் ஆராய்ச்சி இன்றும் தொடர்ந்து வருகிறது. மேலும் 5G மிகவும் பாதுகாப்பான ஒரு தொழில்நுட்டபாமா  என்றால் அது தவறு, இது ஒரு பாதுகாப்பு அற்ற ஒரு தொழில்நுட்ப்பம் ஆகும். இருப்பினும் இது கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 
 • இது ஒரு செலவு மிகுந்த தொழில்நுட்பம் ஆகும்.
Must Read:அண்டார்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகவும் பெரிய சிலந்தியும் அதன் வித்தியாசமான சுவாசமும் 

0 Comments

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!