அசைந்தாடு - குழந்தைகளுக்கான புது பாடல்கள் | தமிழ் கவிதைகள்

குழந்தைகளுக்கான புது பாடல்கள்

அசைந்தாடு
அசைந்தா டம்மா அசைந்தாடு 
ஆசைக் கிளியே அசைந்தாடு 
இசையோ டொன்றாய் அசைந்தாடு 
ஈரக் குலையே அசைந்தாடு 

உதய நிலாவே அசைந்தாடு 
ஊதும் நிலாவே அசைந்தாடு 
எழிலாய் வந்து அசைந்தாடு 
ஏற்றத் தேடு அசைந்தாடு 

ஐயம் விட்டு அசைந்தாடு 
ஒழுக்கம் பேணி அசைந்தாடு 
ஓவிய நூலே அசைந்தாடு 
ஒளவிய மின்றி அசைந்தாடு 


ஆசிரியர்  :  சாரணா கையூம் 0 Comments

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!