தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள்

தாய்ப்பால்

தாய்ப்பால்:

தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தால் வைட்டமின்கள் மருந்துகள் எதுவும் கொடுக்க தேவையில்லை. அந்த அளவுக்கு அனைத்துச் சத்துக்களையும் கொண்டது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கு இணையான உணவு வேறு எந்த உணவிலும் இல்லை. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல, தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்கு பயன்படுகிறது.

தாய்ப்பாலானது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு பொருட்களை கொண்டுள்ளது குறிப்பாக இம்யூனோகுளோபுலின் A. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து நோய் கிருமிகளிடம் இருந்து குழந்தைகளை காக்கிறது. 

குழந்தைகளுக்கு

இயற்கையான முதல் நோய்த் தடுப்பு மருந்து. இதனால் குழந்தைகளின் உடலின் வெப்பநிலை சரியான அளவில் வைக்கப்படும்.

தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

பெரியவர்கள் ஊஞ்சலில் உறங்கினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

தாய்ப்பாலில் சோடியம் குறைவாக இருப்பதால் குழந்தயின் சிறுநீரகத்திற்கு நல்லது. மேலும்வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சருமநோய், காதில் சீழ் வடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கும்.

தாய்மார்கள்
                                      

குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் நோய்கள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்புத் தன்மையை பெருக்கும்.


குளியல் இப்படிதான் செய்யவேண்டும் என்று சிறுவர்களுக்கு பெரியவர்கள் உரைக்கும் காரணமும் அதன் அறிவியலும் 

நன்மைகள்

 • காதில் ஏற்படும் பாதிப்புகளை 50% வரை குறைக்கிறது. (1)
 • மூச்சுக்குழல் தொற்று ஏற்ப்படுவது 72% வரை மட்டுப்படுத்துகிறது. (2)
 • குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் கொடுக்கும்போது 63 % வரை மூக்கு, காது மற்றும் தொண்டை பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது. (3)  
 • குடல் பிரச்சனைகளை 64% வரை குறைகின்றது. (4)
 • முதல் நிலை சர்க்கரை நோயை தடுக்கிறது. (5)
 • குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த புற்றுநோயை தடுக்கிறது. (6)
 • குழந்தைகளுக்கு சிறு வயதில் ஏற்படும் உடற்பருமனை தடுக்கிறது.
 • குழந்தைகளை மிகவும் திறமைசாலியாகவும் புத்திசாலியாகவும் வளர உதவுகிறது.

தாய்மார்களுக்கு 

 • குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது.
 • கருவுற்ற காலங்களில் ஏற்படும் உடற்பருமனை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் குறைகிறது. நாளுக்கு 500 கலோரிகள் வரை குறைகிறது.
 • குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மனஅழுத்தம் குறைகிறது.

மேலும் செய்திகள்

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post