7 காரணங்கள் | பெட்ரோல் கார்களை விட எலக்ட்ரிக் கார்கள் ஏன் சிறந்தவை தெரியுமா?


7 காரணங்கள் | பெட்ரோல் கார்களை விட எலக்ட்ரிக் கார்கள் ஏன் சிறந்தவை தெரியுமா?

எலக்ட்ரிக் அல்லது மின்சார கார்கள் எரிபொருளுக்கு பதிலாக மின் ஆற்றலைப் பயன்படுத்தும் தானுந்து ஆகும். மின்கலத்தில் ஆற்றல் சேமிக்கப்பட்டு மோட்டார் கொண்டு அதை இயக்க ஆற்றலாக மாற்றி எலெக்ட்ரிக் கார்  செயல்ப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் மீண்டும் மின்னேற்றம் செய்யப்படக்கூடிவை.

காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது | விளக்கம் 

தற்போதைய சூழலில் மின் தானுந்துகள் (cars) விலை அதிகமானவை. ஆனால் எரி பொருள் விலை அதிகரிப்பு, சூழல் மாசடைதல் பிரச்சினை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய காரணங்கள் எதிர்காலத்தில் மின் தானுந்து பயன்பாட்டை விரைவில் அதிகரிக்கும். மின் தானுந்து, எரிபொருள் பயன்படுத்தும் தானுந்து (Gas fueled cars) போல மாசடைந்த புகையை வெளியேற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு மிகவும் குறைவு. இந்தியாவில் மகிந்திரா நிறுவனம்தான் எலெக்ட்ரிக் கார்களை முதலில் அறிமுகம் செய்தது. 
இந்த இரண்டு மாடல்களும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் வரையிலும் பாட்டரியை சேமித்துக் கொள்ளும் திறனுடையது.

1. எலெக்ட்ரிக் கார்களின் விலை பெட்ரோல் கார்களை விட குறைவு:

எலெக்ட்ரிக் கார்களின் விலை பெட்ரோல் கார்களை விட மிகவும் விலை குறைவு. மற்ற கார்களைப் போல் இவற்றில் எப்போதும் ஆயில் மாற்ற தேவையில்லை, அடிக்கடி எரிபொருள் செலவு இருக்காது மற்றும் எவ்விதமான புகை சோதனை போன்றவற்றால் அவதிப்பட வேண்டி இருக்காது.


2. எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுசூழலுக்கு சிறந்தது:

2018 ஆம் ஆண்டில் பெரிய பிரச்னையாக இந்த சுவாசக் கோளாறு அமைந்துள்ளது. எலெக்ட்ரிக் கார்களினால் எவ்விதமான நச்சுக்காற்றும் வெளிப்படுவதில்லை. மேலும் சுத்தமான காற்று உள்ள சுற்றுசூழலில் நாம் வளரும்போது மனழுத்தம், சுவாசக் கோளாறு போன்றவை குறைவதுடன் தேவையற்ற மருத்துவச் செலவுகளும் குறைகிறது.
3. பெட்ரோல் பங்குகளை தேடி அலையத் தேவையில்லை 

எலெக்ட்ரிக் கார்களை நாம் வீடு மற்றும் அலுவகங்களில் இருந்தே அதனை முழுமையாக சார்ஜ் செய்ய இயலும். இதற்காக நாம் பெரும் தொகையை செலவுச் செய்ய தேவைப்படாது. டீசலுடன் ஒப்பிடும் போது இதில்  கிலோமீட்டருக்கு 2 முதல் 6 ரூபாய் வரைதான் செலவு ஆகிறது.4. மிகவும் குறைந்த செலவு :

பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின்  மாதாந்திர சர்வீஸ் செலவு மிகவும் குறைவுதான்.


5. இரைச்சலற்ற உலகம் :

எலெக்ட்ரிக் கார்கள் மிகவும் அமைதியானது. நீங்கள் உள்ளே அமர்திருந்தால் கூட எஞ்சினின் சத்தத்தை கேக்க இயலாது.
6. அதிக சக்தி மற்றும் திறன் கொண்டது2014 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது அதன் பின் அசோக் லைலான்ட் நிறுவனமும் 2016 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.

எலக்ட்ரிக் கார்கள் அதிக திறன் கொண்டது ,எலெக்ட்ரிக் கார்களின் திறனும் அதைப்போன்றது தான் தற்போது அதிக எடையை கூட இழுக்கும் அளவுக்கு அதன் மோட்டார்கள் செயல்படும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

7. குறைந்த செலவில் அதிப்படியான மைலேஜ்:

எலெக்ட்ரிக் கார்களை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் குறைந்தப் பட்சமாக  300 மைல்ஸ் வரை பயணிக்க முடியும். மேலும் இதனால் அதிகப்பட்சமாக 248km/hr  என்ற வேகம் வரை செல்ல முடியும்.

8. வரியில் இருந்து விடுதலை :

பெரும்பாலான அரசுகள் எலெக்ட்ரிக் கார்கள் வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் கார்களில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதன்  உற்பத்தி விலையில் இருந்து 30 %தள்ளுப்படி விலையில் அதன் உதிரிப்பாகங்களை பெறலாம்.

ஹைபிரிட் என்ஜினுக்கும் டீசல் என்ஜினுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? | SciTamil - Engineering


#SciTamil #Electric_Cars #Petrol #Diesel

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post