ஹைபிரிட் என்ஜினுக்கும் டீசல் என்ஜினுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? | SciTamil - Engineering


ஹைபிரிட் என்ஜினுக்கும் டீசல் என்ஜினுக்கும் உள்ள வித்தியாசம் 


ஹைப்ரிட் என்ஜின்கள் (Hybrid Engine) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆற்றல்கள் மூலம் இயங்கும் திறன் உடைய என்ஜின்கள் ஆகும். அதாவது ஹைப்ரிட் வாகனங்கள் இயங்க தேவையான ஆற்றலை கம்பாஸ்டன் என்ஜின்கள் (Internal Combuston Engines) உதவியுடன் ஒரு ஜெனரேட்டரை இயக்கி அதன் மூலம் வரும் ஆற்றலைக் கொண்டு அதிக திறன் வாய்ந்த பாட்டரிகள் மூலம் சேகரித்து வாகனத்தை இயக்குவதாகும்.

உதாரணமாக: நீர்மூழ்கிக் கப்பல் மேலே மிதக்கும் போது டீசல் எஞ்சின்களையும் உள்ளே சென்றபின் பாட்டரிகளையும் உபயோகிக்கும். 

ஏன் இது ?

பொதுவாக நாம் இருக்கும் இந்த காலத்தில் எரிபொருட்களுக்காகவே  பெரும் தொகையை செலவு செய்ய வேண்டி உள்ளது மேலும் சுற்றுசூழலைக் கருத்தில்கொண்டும் இந்த மாதிரியான வாகனங்கள் உருவாக்கபட்டது.

எப்படி?

  • பொதுவாக டீசல்/பெட்ரோல் வாகனங்கள்  இயங்கும்போது தேவைப்படும் ஆற்றல் குறைவுதான் ஆனால் நாம் ஒவ்வொரு முறையும் வாகனத்தை சாலைகளில் நிறுத்தி நிறுத்தி செல்லும்போது அதில் பெருமளவு ஆற்றல் தேவையின்றி செலவாகிறது. 
                                        
  • ஆனால் இந்த ஹைப்ரிட் கார்கள் இயங்கும்போது ஆற்றல் சேமித்துவைத்துக் கொள்ளும் அதைபோல் சாலையில் சிக்னலின் போது நிறுத்துவதால் ஏற்படும் இழப்பு இதில் இல்லை காரணம் சிக்னலில் நிக்கும்போது  வாகனம் டீசல்/பெட்ரோல் என்ஜினில் இருந்து விடுப்பட்டு மின் மோட்டாரின் கட்டுபாட்டில் வாகனம் வந்துவிடும்.இதனால் எரிப்பொருள் தேவை மிகவும் குறைவு.
  • இதன் பயன்பாட்டின் அடிப்படையில் ஹைப்ரிட் கார்கள் மிகவும் சிறந்தவையாக உள்ளது. ஆனால் இது பெட்ரோல் கார்களை ஒப்பிடுகையில் மிகவும் மதிப்புமிக்கது.

0 Comments

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!