இந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ

சந்திராயன் 2 லேண்டர் (விக்கிரம்)

சந்திராயன் 2 வின் ரோவர் விக்ரம் விண்கலத்தை விட்டு பிரிந்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்க்கு 2.1 கிமீ முன் இஸ்ரோ உடனான தொடர்பை இழந்தது.

உலகின் எந்த நாடும் இதுவரையில் நிலவின் தென் துருவத்திற்க்கு ஆய்விற்காக எந்த ரோவரையும் அனுப்பியது இல்லை. ஆனால் மற்ற பகுதிகளில் இரசியா, சீனா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவுக்கு ரோவரை அனுப்பியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் நாடும் நிலவுக்கு தனது பிரேஷீட் என்ற லேண்டெரை அனுப்பியது ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அது நிலவில் மோதி விபத்துக்குள்ளானது. 

நிலவில்  தென் துருவத்தின் நிலவமைப்பு தெளிவாக இல்லாததால் இஸ்ரோ குழு மெது மெதுவாக தனது தரையிறக்கதை மேற்கொள்ள முடிவெடுத்தனர். 

அதாவது வேகமாக தரையிறங்குவதற்க்கு பதில் ஒவ்வொரு முறை கீழே இறங்கும் போதும் தனது பூஸ்டரை பயன்படுத்தி தனது வேகத்தை குறைத்தும் மெதுவாகவாகும் தரை இறங்கியது.

ஆனால் நிலவில் இருந்து  2.1 கிமீ தொலைவில் விக்ரம் லேண்டர் இருக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புவியில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து அளிக்கப்பட்ட சிக்னல்கள் சந்திரயான் 2 விண்கலத்தை அடைந்த பின் லேண்டரில் இருந்து எந்த சிக்னல்களும் கிடைக்காததால் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் மோதி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதன் பின் இஸ்ரோ தனது விண்கலத்தின் மூலம் லேண்டருக்கும் என்ன ஆயிற்று என்று தகவல் சேகரிக்க உள்ளதாக தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


ஆனாலும் சந்திராயன் 2 விண்கலம் தற்போதும் செயல்பாட்டில் இருப்பதால் சந்திராயன் 2 திட்டம் 95% வெற்றி என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் பிறகு சந்திரயான் 2 விண்கலம் ஒரு வருடதிற்க்கு தனது பனியை செய்து முடிக்கும்.

மேலும் நவம்பர் மாத தொடக்கதில் அல்லது அடுத்த மாத இறுதியில் நிலவியல் ஆய்வு செயற்க்கை கோளான கார்டோசாட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இது மிகத்துல்லியமாக நிறங்களை வேறுப்படுத்தும் திறன் உடையதால் மிகத்தெளிவான புகைப்படங்களை புவிக்கு அனுப்பும் என்று எதிர்ப்பார்க்கலாம். 

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post