நாயின் ரோமத்தை விட ஆணின் முகத் தாடியில் அதிக பாக்டீரியங்கள் உள்ளன

நாயுடன் தாடியுடன் உள்ள ஆண் (Image© shutterstock)

ஐரோப்பாவில் நடத்தப்பட்ட  ஆய்வில், ஒரு நாயில் அதிக அழுக்கான பகுதியில் இருக்கும் நோய் கிருமிகளின் அளவை விட ஒரு ஆணின் தாடியில் அதிக நோய் கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் நோக்கம்: 

நாய்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய பல மருத்துவமனைகளில் MRI ஸ்கேன் இல்லாததால் மனிதர்கள் பயன்படுத்தும் MRI ஸ்கேனை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இதனால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஏதேனும் நோய் கிருமிகள் பரவ வாய்புள்ளதா என கண்டறிய  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில் 18 முதல் 76 வயதுடைய 18 ஆண்களும், நன்கு வளர்ந்த 30 நாய்களும்  ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.  

ஆய்வின் முடிவு: 

ஒவ்வொரு முறையும் நாய்களை MRI ஸ்கேனின் வைத்து சோதனை செய்த பிறகு அதில் உள்ள நோய் கிருமிகளின் அளவு மனிதர்களை வைத்து சோதனை செய்த பின் உள்ள நோய் கிருமிகளின் அளவை விட மிகவும் குறைவு என்பதை கண்டறிந்தனர். 

ஐரோப்பிய மருத்துவ கதிரியக்கவியல் துறை சார்பாக பல இடங்களில் நடத்த்தப்பட்ட ஆய்வில் முதலில் சோதனைக்காக வரும் நாய்களின் வாய் பகுதி, மிகவும் அசுத்தமாக உள்ள உடல் பகுதி போன்ற இடங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அதைப்போல் மருத்துவமனைக்கு சோதனைக்காக வரும் (வருடம் ஒரு மட்டுமே வரும் ஆண்கள்) ஆண்களின் தாடி பகுதியில் இருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டன, இரண்டு மாதிரிகளையும் MRI ஸ்கேனில் வைத்து ஆய்வு செய்ததில் 18 ஆண்களின் தாடி பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் "அதிகளவு நோய் கிருமிகள்" இருப்பதையும் நாய்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 23 நாய்களின் மாதிரிகளில் மட்டுமே நோய் கிருமிகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

இதில் 7 ஆண்கள் மற்றும் 4 நாய்களிடம் காணப்பட்ட நோய் கிருமிகள் மனிதனை தாக்கும் திறனுடைய நோய் கிருமிகள் ஆகும், இவை பொதுவாக சிறுநீர் பாதையை தாக்கும் எண்டேரோகுஸ்ஸ் பேசிலஸ் என்ற நோய் கிருமியும்,  தோல் மற்றும் கோழை படலத்தை தாக்கும் ஸ்டாஃபிலோ ஔரேஸ் பாக்டீரியமும் கானப்பட்டன.

குறிப்பாக ஆண்களிடம் காணப்பட்ட நோய் கிருமிகள் அனைத்தும் அவர்களின் முகத் தாடியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் தான் காணப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு MRI ஸ்கேனில் விலங்குகளை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறிவதில் தொடங்கி வேறு பல ஆய்வையும் ஆய்வாளர்கள் மேற்கொள்ள வழிவகை செய்துள்ளது.  

மேற்கோள்கள்: 

  • MRI ஸ்கேன் உபயோகிப்பதால் நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் கிருமிகள் பரவுவதில்லை.
  • தாடியுள்ள ஆண் ஒரு நாயை விட அதிக நோய் கிருமிகளை சுமக்கிறார்.
  • மருத்துவமனையில் உள்ள சுகாதாரமற்ற பகுதிகள் நோய் கிருமிகளின் அளவை அதிகரிக்கிறது.   

ஆய்வறிக்கை பற்றிய தகவல்கள்


  • அறிக்கை வெளியிட்ட தேதி  :  பிப்ரவரி 2019. 
  • வெளியிட்டவர்கள்      :  Springer Berlin Heidelberg 
  • உரிமை   :  The European Society of Radiology
  • ஆய்வாளர்கள்  :  Gutzeit, A., Steffen, F., Gutzeit, J. et al.


Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post