பள்ளியில் நீங்கள் கற்றுக் கொள்ளாத 10 அறிவியல் உண்மைகள் | Facts Mania

1/10 | பிளேடை கரைக்கும் மனிதனின் வயிறு 

பிளேட்

 • மனிதர்களின் வயிற்றில் உள்ள அமிலங்கலானது நாம் முகத்தை சவரம் செய்ய பயன்படுத்தும் பிளேடையே சிதைக்கும் திறன் வாய்ந்தது ஆகும்.
 • அமிலங்களின் அமிலத்தன்மையை நாம் ph என்ற அளவீட்டில் தான் அளவிடுவோம்.
 • பொதுவாக அமிலங்களின் ph ஆனது 1 முதல் 14 வரை இருக்கும், இதில்    ph இன் மதிப்பு குறைய குறைய அமிலத்தின் வீரியம் அதிகரிக்கும்.
 • நாம் வயிற்றில் உள்ள அமிலங்களின் ph மதிப்பானது 1.0 முதல் 2.0 வரையிலான அளவில் இருக்கும். 
சான்று: படிக்க 

2/10 | காந்தப்புலத்தை பயன்படுத்தும் விலங்குகள்

காந்தப்புலத்தை பயன்படுத்தும் ஆமை 

நிலத்தில் உள்ள விலங்குகள் தனது இருப்பிடத்தை விட்டு வெகு தொலைவிற்க்கு செல்லும் போது தான் வந்த பாதையை மறந்துவிட்டால் பாதையை தேடி தேடி அலைய ஆரம்பிக்கும்.

ஆனால் கடலில் உள்ள ஆமைகள் மற்றும் சாலமன் போன்ற கடல் வாழ் உயிரிகள் புவியின் காந்தப்புலத்தை பயன்படுத்தி தனது இருப்பிடத்தை கண்டறியும் திறனுடையவை ஆகும்.   
 சான்று: படிக்க 

3/10 | கூச்சம் ஏற்பட்டால் சிரிக்கும் எலிகள் 

கிச்சு கிச்சு மூட்டப்படும் எலி

எலிகள் நாம் நினைப்பதை விட மிகவும் வித்தியாசமான விலங்குகள் ஆகும்.
எலிகளை கொண்டு நேஷனல் ஜியோக்ராபிக் நடத்திய ஆய்வில் எலிகளுக்கு கிச்சு கிச்சு மூட்டும் போது சிரிக்கச் செய்கின்றன என்பதை கண்டறிந்தனர்.
சான்று: பார்க்க 

4/10 | சுவாசக் காற்றுக்கும் நிறமுண்டு

திரவ நிலையில் ஆக்சிஜன்

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாக ஆக்ஸிஜன் உள்ளது.
ஆக்ஸிஜன் வாயு நிலையில் உள்ளபோது அவற்றிற்க்கு நிறமோ மனமோ கிடையாது ஆனால் திரவ நிலையில் உள்ளபோது  இவை நீல நிறத்தில் கானப்படும். 

5/10 | நவீன ஆவர்த்தன அட்டவனையில் இடம்பெறாத ஆங்கில எழுத்து 

ஆவர்த்தன அட்டவணை
 • 'J' என்ற ஆங்கில எழுத்து நவீன ஆவர்த்தன அட்டவனையில் பயன்படுத்தப் படவில்லை.

6/10 | வின்னில் உள்ள நட்சத்திரங்களை விட புவியில் மரங்கள் அதிகம்

விண்ணும் மரமும்
 • நாசாவில் உள்ள ஆய்வாளர்கள் வின்னில் மொத்தமாக 100 முதல் 300 பில்லியன் நட்சத்திர கூட்டங்கள் மட்டுமே இருக்க கூடும் ஆனால் நமது புவியில் 3.04 ட்ரில்லியனுக்கும் அதிகமான மரங்கள் உள்ளதாவும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
சான்று: படிக்க  

7/10 | வானில் உள்ள மேகக்கூட்டங்கள் அதிக எடை உடையவை

மேகக்கூட்டம்
 • நாம் சிறு வயதில் பார்த்த அனைத்து பொம்மை படங்களிலும் மேகங்களில் ஏறி பறப்பதைப் போன்ற ஒரு காட்சியை பாத்திருப்போம், ஆனால் உன்மையில் மேகங்கள் மிகவும் கனமானவை ஆகும்.
 • ஒரு தனித்த மேகமானது ஒரு பெரிய சரக்கு விமானத்தை விட அதிக எடையுடையது ஆகும். 
சான்று: படிக்க   

8/10 | வாழைப்பழம் கதிர்வீச்சுத் தன்மை உடையது

வாழை
 • உன்மையில் வாழைப்பழம் கதிர்வீச்சு அபாயம் கொண்ட ஒரு பழம் ஆகும். ஆம் இவற்றில் நிறைந்துள்ள பொட்டாசியம் சிதைவடையும் போது அவை கதிர்வீச்சுக்கலாக வெளியேறுகின்றன.
 • ஆனால் இந்த கதிர்வீச்சு நம் உடலை எந்த விதத்திலும் பாதிக்காது,  ஒருவர் இந்த வாழைப்பழத்தால் வெளியேறும் கதிர்வீச்சால் உயிரிழக்க 10,000,000 வாழை பழத்தை ஒரே சமயத்தில் உண்ண வேண்டும்.  
சான்று: படிக்க 

9/10 | குளிர்ந்த நீரை விட சூடான விரைவாக உறையும்

 • குளிர்ந்த நீரை விட சூடான நீர் மிகவும் விரைவாக உறையும் தன்மை கொண்டது  இதற்க்கு எதிர் மேம்பா விளைவு என்று பெயர்.
 • மேம்பா விளைவை பற்றி ஆய்வாளர்கள் ஆராயும்போது தற்செயலாக இந்த விளைவை கண்டறிந்தனர்.

10/10 | மனிதர்களும் பூஞ்சைகளும்

மனித டி‌என்‌ஏ

 • 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் மனிதர்களின் உடலில் உள்ள மொத்த ஜீனோம்களில் 1 சதவீதம் தாவர ஜீனோம்களில் இருந்து தோன்றியதாக கண்டறிந்துள்ளனர்
சான்று: படிக்க 

+1 | பறக்கும் பந்துகள்

சுழலும் பந்து

ஒரு பந்தை சுழற்றி விட்டு கீழே போடும் போது அவை தரையை தொடும் வரையில் காற்றில் பறந்து கொண்டு இருக்கும். இந்த நிகழ்விற்க்கு மேக்னஸ் விளைவு என்று பெயர்.  

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post