அவ்வாறு செய்த ஆய்வில் ‘ப்ரிசெர்வன்ஸ்’ ரோவரை தரை இறக்க பயன்படுத்திய அமைப்பு ரோவரை இறக்கியப்பின் கீழே விழுந்து நொறுங்கி கிடப்பதை படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
எதனால் இப்படி நொறுங்கியுள்ளது?
நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் கிட்டதிட்ட மணிக்கு இருபதாயிரம் கிலோமீட்டர் (20,000 kph) என்ற வேகத்தில் செவ்வாயின் வளிமண்டலம் வழியாக உள்ளே நுழைந்தது.
உள்ளே நுழைந்தப்பின் ஏற்படும் அதிகப்படியான ஈர்ப்புவிசையை சமாளிக்க ரோவர் எதிர் உந்துவிசையை கொடுத்து ரோவர் தனது வேகத்தை குறைக்கும் மேலும் அதிகப்படியான வெப்பத்தை ரோவரை தாங்கும் வெளிப்புற அமைப்பின் முன் புறம் உள்ள பெரிய மூடி போன்ற அமைப்பு குறைத்து ரோவரை பாதுகாத்தது.
தரையை அடையும் முன் பாராசூட் என்கின்ற காற்று பலூன்களை கொண்டு ரோவரின் வேகம் 1600kph என்கின்ற அளவுக்கு குறைத்து பின் ரோவரை தரையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு தானியங்கி அமைப்பு மூலம் தரையிறக்கினர்.
தரை இறங்கிய பின் மீதமுள்ள காற்று அடைக்கப்பட்ட பலூனும் மீதமுள்ள ரோவர் தாங்கி செல்லும் பகுதியும் சற்று தொலைவில் கீழே விழுந்து நொறுங்கியது.
எதற்காக நாசா இதை பார்க்க விரும்பியது?
நாசாவில் உள்ள பொறியாளர்கள் இந்த நொறுங்கிய அமைப்பினை ஆராய்வதன் மூலம் வரும் காலங்களில் அனுப்பப்படும் ஆய்வுகலங்களை பாதுகாப்பாகவும் மேலும் அதிக துள்ளியதுடனும் இருக்க வழிவகுக்கும்.
#NASA #Science #Rover
0 Comments
தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!