மது அருந்துபவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பு குறைவு ! ஆய்வில் உறுதியானது

Drinking

ஆய்வு சுருக்கம்:

மது பழக்கம் அற்றவர்களை காட்டிலும் மிகவும் குறைவாக (அ) அவ்வப்போது மது அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு மிகவும் குறைவான அளவில் மட்டுமே இதய கோளாறுகள் ஏற்படுவதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வு:

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே!"

ஆம் மது பழக்கம் தீமையே ஆனால் அளவோடு அதை எடுத்துக்கொளும் போது அதில் சில நன்மைகளும் உள்ளது என்பதை நிருபிக்கும் வகையில் இந்த ஆய்வு அமைந்துள்ளது.
UK பயோ பேங்கை சேர்ந்த  3,71,463 தன்னார்வாளர்களிடம் நடத்தப்பட்ட இந்த மிகப்பெரிய ஆய்வில் சராசரியாக 57 வயதும் வாரம் 9.2 முறை மது உட்கொள்ளும் பழக்கம் உடையவர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வானது வெறும் இரத்த மாதிரிகள் மற்றும் உடல் நிலையை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்காமல் "Mendelian randomization" என்ற மரபணு சோதனையையும் உட்படுத்தி பல கோணங்களில் முடிவுகளை சோதிதுள்ளதாக இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஆய்வு செய்ததில் மிகவும் அதிகமாக மது பழக்கம் உடையவர்களுக்கு இரத்த கொதிப்பு மற்றும் இதய நோய் கோளாறுகள் அதிகளவில் உள்ளதாகவும், மிகவும் குறைவான அளவில் மது அருந்துபவர்களுக்கு இதய நோய் கோளாறுகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதை கண்டறிந்துள்ளனர்.
மிகவும் அதிக மது பழக்கம் கொண்டவர்கள் யார்?
  • வாரம் 7 முதல் 14 முறைக்கு மேல் மது அருந்துபவர்கள்
மிகவும் குறைந்த மது பழக்கம் கொண்டவர்கள் யார்?
  • வாரம் 0 முதல் 7 முறை மது அருந்துபவர்கள்

மேலும் 30,716 பேரிடம் நடத்தப்பட்ட மற்றறொரு ஆய்வில் இதய நோய் உள்ளவர்கள் மேலும் மது எடுத்துக்கொள்வதால் இதய நோய் அதிகரிப்பதாகவும் மதுவின் அளவை குறைப்பதால் இதய நோய் கட்டுக்குள் அல்லது குறைவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

முடிவு:

மது பழக்கம் உடையவர்களுக்கு குறைவான அளவில் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதிகம் மது அருந்துபவர்களுக்கு அதி இரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள்:

Kiran J. Biddinger மற்றும் Connor A. Emdin, MD, DPhil, Mary E. Haas, PhD, Minxian Wang, PhD, George Hindy, MD, Patrick T. Ellinor, MD, PhD, Sekar Kathiresan, MD, and Amit V. Khera, MD, MSc.

கதை மூலம்:

MGH ல் இருந்து எடுக்கப்பட்டவை.
குறிப்பு: ஆய்வு வாசர்களுக்கு புரியும் வண்ணத்தில் மாற்றப்பட்டுள்ளது.

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post