இரவில் விழிக்கும் நபர்கள் மற்றவர்கள் மீது ஏன் வெறுப்புடன் காணப்படுகின்றனர்?


ஆம் இரவில் விழிக்கும் நபர்கள் மற்றவர்களின் மீது வெறுப்புணர்வுடனும் நம்பிக்கை அற்ற மனநிலையிலும் காணப்படுவர்.

இதை நீங்கள் நேரடியாக சோதித்து கூட பார்க்க இயலும், வீட்டில் உங்களின் தாய் அல்லது தந்தை இரவில் எப்போவாவது தூக்கமின்றி இருக்கும்போது மறுநாள் அவர்களை நன்கு கவனியுங்கள், அவர்களின் முகம் தூக்கமின்றி வாடி சற்று எரிச்சலுடன் காணப்படுவர். இது தூக்கமின்மை காரணமாக ஏற்படும் பதிப்பே ஆகும்.

தூக்கமின்மையால் ஒருவர் தவிக்கும்போது மற்றவர்களின் முகத்தை பார்த்து அவர்கள் உரையாடுவது இல்லை, இதனால் இரு நபர்களிடையே உள்ள உறவு சற்று பலவீனம் அடைகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” அதாவது ஒருவரின் மனதில் இருப்பதை அவர்களின் முகம் காட்டிவிடும். அதைப்போலவே தூக்கமின்மையால் ஒருவர் வாடும்போது அவர்களின் முகம் பொலிவிழந்து கவர்ச்சியற்று காணப்படுவர். இதன் காரணமாக அவர் மற்றவர்களின் முகத்தை பார்த்து உரையாடுவதில்லை, இது தினம் தொடரும்போது இருவருக்கு இடையே உள்ள நெருக்கம் அல்லது உறவு என்பது வலுவிழக்கிறது.

ஆய்வு:

தற்போது ஆராய்ச்சியாளர்கள் தூக்கமின்மை எப்படி ஒருவரை பாதிக்கிறது என்று ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். இதில் ஆய்வாளர் 45 பேரை கொண்டு இரு மாதங்கள் ஆய்வை மேற்கொண்டனர்.

ஆய்வில் உள்ளவர்கள் முதல் வாரம் இரவு எட்டு மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்துடனும் அடுத்த வாரம் இரவில் தூக்கமின்றியும் இருப்பார்கள். ஒவ்வொரு வாரம் இறுதியிலும் அனைவரிடமும் சில படங்களை காண்பித்து அதற்கு மதிப்பெண் இட வைத்து அதை ஆராய்ந்ததில் இரவில் நன்கு தூங்கியபோது அவர்கள் அளித்த மதிப்பெண்கள் தூக்கமின்றி இருந்தபோது அவர்கள் அளித்த மதிப்பெண்களும் நேர்மாறாக இருந்தது.


அதாவது தூக்கமின்றி இருந்தபோது அவர்கள் மதிப்பிட்ட முகங்கள் மிகவும் கவர்சியற்றும் நம்பிக்கையற்ற வகையிலும் கானப்பட்டவைகளை தேர்ந்தெடுத்து இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் கூறுகையில் இது மட்டும் அல்லாமல் தூக்கமின்றி ஒருவர் தவிக்கும்போது அவர்கள் சமூகத்தின் மீதான ஈடுபாடு குறைவதும் தெரிகிறது அன்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ஒருவர் தூக்கமின்றி இருக்கையில் எவ்வாறு அவர்களின் மனநிலை இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொண்டும் அல்லவா!, உங்கள் வீட்டிலோ அல்லது நெருங்கிய நபர்களிடம் இந்த மாதிரியான மாற்றம் தென்பட்டால் அவர்களுக்கு உங்களால் முடிந்த ஆறுதல்களை அளித்து அவர்களின் மனநிலை சரிசெய்ய முயலுங்கள்.

ஆய்வு: Nature and Science of Sleep

ஆய்வாளர்: Lieve van Egmond

#Health #Sleep #Research

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post