தெரிந்துகொள்ளுங்கள் - நீங்கள் எடுக்கும் தலை வலி மாத்திரைக்கு எப்படி தெரியும் இது தலைவலியை சரி செய்ய வேண்டும் என்று ?

How-tablets-are-working


நீங்கள் தலைவலிக்கு எடுக்கும் மாத்திரையை விழுங்கிய பின் அதற்கு எப்படி தெரியும், "நாம் நேராக தலைக்கு சென்று வலியை குறைக்க வேண்டும் என்று ?

இதை நீங்கள் எப்போவாவது நினைத்தது உண்டா ? என்றால் நம்மில் பலர் இல்லை என்று தான் கூறுவோம் அதைப்போல்தான் நாம் விழுங்கும் மாத்திரைக்கும் அது எங்கே செல்ல வேண்டும் என்று அதற்கு தெரியாது.

அப்படி என்றால் அது எப்படி நம் உடலில் உள்ள பாதிப்பை சரி செய்கிறது?

இதற்கான பதில் ஆராய்ச்சியாளர்களிடம் உள்ளது. ஆம்!,

ஒவ்வொரு மாத்திரைக்கும் அல்லது மருந்துக்கும் ஒரு முக்கிய மூலக்கூறு ஒன்று உள்ளது அதை வேறுபடுத்துவதன் மூலம் அது எங்கே செல்ல வேண்டும் என்பதை கூற இயலும்

மாத்திரைகளில் இரண்டு விதமான பொருட்கள் இருக்கும் அதில் ஒன்று வியாதியை குணப்படுத்தும் மூலக்கூறு மற்றொன்று சுவை, வண்ணம் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றை அளிக்கும் மூலக்கூறு.

"உதாரணமாக தலை வலிக்காக எடுத்துக்கொள்ளும் ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையில் வலிக்கான மருந்துடன் ஒரு மூலக்கூறு அந்த மருந்தை தலைக்கு உடையாமல் எடுத்து சென்று சேர்க்கவும் மற்றொரு மூலக்கூறு அதை தலைக்கு சென்றவுடன் உடைக்கும் திறனும் கொண்ட மூலக்கூறு உள்ளது."

ஆனால் மருந்து பொருட்கள் எவ்வாறு உடலுக்கு கடத்தப்படுகிறது ?

நாம் ஒரு மாத்திரையை விழுங்கும் போது உணவு பாதை வழியாக வயிற்றுக்கு சென்று கரைந்துவிடுகிறது, இதற்கு பிறகு குடல் சென்று உறிஞ்சுகள் மூலம் இரத்தத்துடன் உடல் முழுவதும் பயணிக்கிறது.

நீங்கள் பார்த்தீர்களா? நாம் எடுக்கும் மருந்து தேவையான இடத்திற்கு செல்லாமல் உடல் முழுவதும் செல்கிறது இதனால் மருந்தின் வீரியம் குறையும் மேலும் வலி இல்லாத இடங்களில் உள்ள திசுக்களை நாம் எடுக்கும் மருந்துகள் பாதிப்பை ஏற்படுத்தும்போது இதையே நாம் பக்க விளைவுகள் (Side Effects) என்று கூறுவோம்.
ஆம், மருந்துகள் பதிப்பு உள்ள இடங்களுக்கு சென்று நிவாரணம் தரும் வகையில் வடிவமைக்கப் பட்டாலும் அவை வயிறுக்கு சென்று இரத்த நாளங்களால் உறிஞ்சு பின் இரத்த ஓட்டத்தில் கலந்து நிவாரணம் தருவது என்பது மிகவும் நீண்ட தொடர் ஆகும்.

இது மட்டுமல்லாமல் இரத்தத்தில் கலந்த மருந்துகள் விரைவில் அதன் தன்மையை இழந்து சிறுநீர் வழியே வெளியேறிவிடும்.

இதனால்தான் இரத்த கொதிப்பு மற்றும் தொற்று ஏற்ப்பட்டால் நாம் அடிக்கடி மருந்துகள் எடுத்துக்கொண்டே இருக்கிறோம் அப்போதுதான் எடுக்கும் மருந்து நம் உடலில் இருந்து அதற்கான தீர்வு கிட்டும்.

இதற்கு என்ன தான் வழி ?

மாத்திரை மற்றும் மருந்து பொருட்களை ஒத்து பார்க்கையில் மருந்து பொருட்களை நேரடியாக இரத்த நாளங்களில் செலுத்துவதே சிறந்த பலனாக உள்ளது. மேலும் மருந்து பொருள் அதிக செறிவுடன் செலுத்தும்போது பாதிப்பு உள்ள இடங்களை சரி செய்வதில் அதிக பலன் கிடைகிறது அதே சமயம் மற்ற பகுதிகளையும் இவை தாக்கும்போது எதிர் வினையாக பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுகிறது.

நிவாரணமும் வேண்டும் அதே சமயம் பக்க விளைவுகளும் இருக்க கூடாது என்று நீங்கள் நினைப்பது சரிதான் இதற்கும் ஒரு வழி உள்ளது கவலைப்பட வேண்டாம்.


இதற்கு ஒரே வழி நிவாரணம் தேவைப்படும் இடத்தில் நேரடியாக மருந்தை செலுத்துவதே ஆகும். உதாரணமாக தொற்று உள்ள கண்ணில் நேரடியாக சொட்டு மருந்தை போடுவது, சிராய்ப்புகள் மற்றும் தோல் சம்மந்தமான நோய் ஏற்படும்போது மருந்தை நேரடியாக தொழில் மருந்தை தடவி விடுவது போன்றவை ஆகும்.

இதைப்போலவே இன்ஹேலர்ஸ் (Inhalers) பயன்படுத்தி நுரையீரல் சம்மந்தமான பாதிப்புகளை சரி செய்வதும் அடங்கும்.

முடிவு:

நமக்கு என்னதான் மருந்து பொருட்கள் மிகவும் அத்தியாவசியம் என்றாலும் அதனை தினமும் எடுத்துக்கொள்ள முடியாது இதற்காகவே ஆய்வாளர்களும் சில முறை அல்லது அதற்கும் குறைவான முறை மட்டுமே எடுக்கும் வகையில் மருந்துகளை தயாரிக்கும் முனைப்பில் உள்ளனர். (ஆய்வு கட்டுரை).

மேற்கண்ட இந்த கட்டூரையில் எந்த மாதிரி மருந்துகள் எடுக்கும்போது சிறந்த பலனை அளிக்கிறது என்பதை நாம் தெரிந்திருப்போம், எனவே இனி மருத்துவர் ஒரு ஊசி போட்டுக்கொண்டால் சரி ஆகிவிடும் என்று சொன்னால் அதற்கு பயந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
ஆய்வு கட்டூரை: படிக்க
ஆய்வாளர்Tom Anchordoquy

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post