சுயமாக சிந்திக்கும் ரோபோக்கள் வெற்றி - SciTamil


கொலொம்பியா பல்கலைக்கழக பொறியாளர்கள் சுயமாக சிந்திக்கும் ரோபோவை உருவாக்கி வருகின்றனர் 

நமது மூளை எப்போதும் அடுத்து நாம் செய்ய இருப்பதை முன்கூட்டியே

திட்டமிட்டுவதால் நாம் நம் உடலை எந்த தடுமாற்றமும் இன்றி இயக்க முடிகிறது

இது நம்மை சுற்றி உள்ள சூழலை பொறுத்து எப்படி உடலை இயக்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்கிறோம்

இதைப்போலவே இவர்கள் உருவாக்கிய ரோபோவும் தன்னை சுற்றி உள்ள சூழலை முதலில் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு இயங்குகிறது.

இந்த ஆராய்ச்சியில் ரோபோவை சுற்றி 5 கேமராக்கள் வைத்துள்ளனர், இந்த கேமராக்கள் மூலம் ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள பந்தினை தன்னை சுற்றி உள்ள தடைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு தன் கையை வளைத்து இலக்கை அடைகிறது.

எந்த விதமான தடைகள் இருப்பினும் அந்த தடையை அறிந்து அதற்கேற்றவாறு எப்படி தனது கையை மடக்க வேண்டு என்பதை ரோபோவே முடிவு செய்கிறது 

இதில் ஏதேனும் ஒரு தவறு ஏற்பட்டால் ரோபோ அதனை நினைவில் வைத்து கொண்டு அடுத்த முறை அதற்கு ஏற்றவாறு இயங்கும்

இவ்வாறு தன்னுள் உள்ள மோட்டார்களை கொண்டு சுற்றுசூழலுக்கு ஏற்ற அனைத்து விதமான இயக்கங்களையும் கற்றுக்கொண்டு பின் தன் இயக்கத்தை நிறுத்தி கொண்டது.

ஒரு ரோபோ மற்றவர்களின் உந்துதல் இன்றி தானாக கற்றுக்கொள்ளும் திறன் மிகவும் முக்கியமாகும்

இது வரும் காலத்தில் பல நேரங்களில் நமக்கு உதவியாக இருக்கும் மேலும் ஒரு செயலை செய்யும் முன் ஏற்படும் பாதிப்பினை அறிந்து செயல்படும் போது இழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும்

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post