பெண்கள் கவனத்திற்கு ! தாய்பாலில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Micro Plastics

தாய்பாலில் நுண் பிளாஸ்டிக் துகள்கள்:

பிளாஸ்டிக் நுண் துகள்கள் பற்றி நீங்கள் கேள்வி பட்டது உண்டா?

இல்லை என்றால் அதை பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நுண் பிளாஸ்டிக் துகள்கள் என்பவை மிகவும் சிறிய அளவில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சிதைந்து இவை உருவாகிறது.

நுண் பிளாஸ்டிக் துகள்கள் இதற்கு முன் மனிதன் காலடி அதிகம் படாத இடமான அண்டார்டிகாவில் உள்ள பனித்துகளில் கண்டு பிடிக்கப்பட்ட போது இது பெரும் பேசும் பொருளாக மாறியது ஆனால் இன்று இதன் கதையே வேறு.

ஆம்!....

தற்போது ஆய்வாளர்கள் தாய்பாலில் நுண் பிளாஸ்டிக் துகள்களை கண்டுபிடித்துள்ளனர். இது வரும் காலங்களில் அதனை பருகும் குழந்தைகளின் உடல் நலனை பற்றி பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆய்வு:

இந்த ஆய்வானது ரோம் நகரில் நடத்தப்பட்டது, முதலில் நல்ல ஆராக்கியமான உடல் நிலை உடைய 34 தாய்மார்களிடம் இருந்து தாய்பால் மாதிரி சேகரிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சியான செய்தி எதுவென்றால் 75% தாய்பால் மாதிரிகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுண் பிளாஸ்டிக் துகள்கள் இவர்களின் உடலில் எப்படி வந்தது என்று ஆராய்வதற்காக இவர்களின் உணவுகள், அருந்தும் நீர், பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட கடல் உணவுகள் போன்றவற்றை கண்டறிந்து ஆராய்ந்ததில் தாய்பாலில் காணப்பட்ட நுண் பிளாஸ்டிக் துகள்கள் மேற்கண்ட பொருட்களில் இருந்து உடலில் கலக்கவில்லை என்றும் நமது சுற்றுசூழலில் அதிகமாக இவை காணப்படுவதால் எவ்வாறு இது மனித உடலுக்கு வந்தடைகிறது என்பதை கண்டறிய நெடிய ஆய்வு தேவைப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன் 2020ம் ஆண்டு இத்தாலிய ஆய்வாளர்கள் நுண் பிளாஸ்டிக் துகள்களை நஞ்சுக்கொடியில் காணப்படுவதை கண்டறிந்தனர். தற்போது தாய்பாலில் இவை கானப்படுவது வளரும் குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு இது பாதிக்கும் என்பது மிகப்பெரிய அச்சமாக உள்ளது.

நுண் பிளாஸ்டிக் துகள்கள் இமயமலையின் உச்சி மற்றும் மிகவும் ஆழமான பெருங்கடலின் நிலப்பரப்பு போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது மனித உடலில் இவை கலந்திருப்பது எந்த அளவிற்கு நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

"தாய்பாலில் நுண் பிளாஸ்டிக் துகள்" இந்த ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பிளாஸ்டிக் துகள்கள் உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் காணப்படும் துகள்கள் 
(பாலி-எத்திலின், PVC, பாலி-ப்ரோபைலின் ) ஆகும். 

மேலும் ஆய்வாளர்கள் கருத்தரித்துள்ள பெண்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள், உதட்டு சாயம், நுண் துகள்கள் அடங்கிய பற்பசை மற்றும் செயற்கை இழையால் செய்யப்பட்ட துணிகள் போன்றவற்றை உபயோகிப்பதில் மிகுத்த கவனம் செலுத்த வேண்டும் அல்லது உபயோகிப்பதை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இது வரை குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பை இவை ஏற்படுத்திகிறது என்பது கண்டறியவில்லை என்றாலும் "வரும் முன் காப்பது" என்ற கூற்றுக்கு இணங்க நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது நமது கடமையாகும்.

முடிந்த வரை பிளாஸ்டிக் பொருட்களை வீட்டில் பயன்படுத்துவதை குறையுங்கள்.

பாதுகாப்பு முறைகள்:

  • இட்லி, தோசை மாவை பிளாஸ்டிக் பொருட்களில் அடைக்கும் முன் நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் உணவு சேமிக்க உகுந்த ஒன்றா என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
  • பற்பசையில் நுண் துகள்கள் அதாவது உங்கள் பற்பசையில் சிறிய சதுர வடிவ துகள்கள் உள்ளனவா என்று பாருங்க, அப்படி இருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம்.
  • உதட்டு சாயத்தில் தான் அதிகம் இவை இருப்பது கண்டுப்டிக்கப்பட்டுள்ளது எனவே உதட்டு சாயம் இயற்கையான பொருளால் செய்யப்பட்டதா என்பதை அறிந்து பயன்படுத்துங்கள்.
  • முடிந்த வரை பிளாஸ்டிக்கில் அடைத்த உணவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு முறை பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை மறந்தும் மறுமுறை பயன்படுத்தாதீர்கள்.
  • நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உணவு சேமிக்க உகுந்த சான்று பெற்று இருக்க வேண்டும்.
  • செயற்கை இழையால் ஆன துனிகளை பயன்படுத்துவதை குறைத்துகொள்ளுங்கள்.

ஆய்வு கட்டூரை: Raman Microspectroscopy Detection and Characterisation of Microplastics in Human Breastmilk 

 

Ragusa A, Notarstefano V, Svelato A, Belloni A, Gioacchini G, Blondeel C, Zucchelli E, De Luca C, D'Avino S, Gulotta A, Carnevali O, Giorgini E. Raman Microspectroscopy Detection and Characterisation of Microplastics in Human Breastmilk. Polymers (Basel). 2022 Jun 30;14(13):2700. doi: 10.3390/polym14132700. PMID: 35808745; PMCID: PMC9269371.

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post