சர்க்கரையால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்

சில உணவுகளில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட் உள்ளது. எளிய கார்போஹைட்ரேட்டுகள் பால் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் காணப்படுகின்றன. இவை தவிர, இனிப்புகளில் சேர்க்கும் சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் மற்றும் பல் சொத்தை போன்ற பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது

செயற்கை பானங்களில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும்.

சராசரி வயது கொண்ட ஒருவர் ஒரு நாளைக்கு சேர்க்கப்பட்ட சர்க்கரையிலிருந்து சுமார் 308 கலோரிகளை பெறுகிறார் .

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் (AHA) பரிந்துரைப் படி பெண்களுக்கு 100 கலோரிகளும் மற்றும் ஆண்களுக்கு 150 கலோரிகளும் சர்க்கரையில் இருந்து பெறப்படுவதே அதிகம் என்று கூறுகின்றனர்.

எனவே வெறும் கலோரிகளை மட்டும் உட்கொள்வதால் எந்த நன்மையும் இல்லை. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரும் உணவுகளை எடுத்துக் கொள்வதே நல்லது.

சர்க்கரையால் 1. எடை அதிகரிப்பு 2. டைப் 2 நீரிழிவு நோய் 3. பல் சொத்தைகள் 4. இதய நோய்கள்

போன்றவைகளை ஏற்படுகின்றன.