யானையின் 60 தமிழ் பெயர்கள்

5 Min Read

மனிதர்களுக்கு அடுத்து நீண்ட நாள் உயிர் வாழக் கூடிய தரை வாழ் உயிரினம் யானை தான். கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை.

அதிக அளவு நினைவு திறன் கொண்ட விலங்கு யானை தான்.

தாம் செல்லும் அனைத்து பாதைகளையும் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் யானைக்கு உண்டு.
யானைகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக செல்லும். யானை கூட்டத்தை அந்த கூட்டத்தில் உள்ள வயது முதிர்ந்த ஒரு பெண் யானை தலைமை ஏற்று வழி நடத்தும், அதனை பின் தொடர்ந்து மற்ற யானைகள் செல்லும்.

யானையின் 60 தமிழ் பெயர்கள்
யானை குடும்பம்

பெண் யானை குட்டி போடும் போது அதனை அருகில் இருக்கும் மற்ற யானைகள் கவனித்து கொள்ளும்.

4 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே குட்டி ஈனும். ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈனுவது மிகவும் அரிதான ஒன்று.

புதிதாக பிறந்த யானை குட்டிக்கு கண் பார்வை தெரியாது. அனால் இவை பிறந்து சிறிது நேரத்துலயே எழுந்து நிற்கும் திறன் பெற்றுவிடும்.

- Advertisement -

யானையின் கற்பகாலம் 22 மாதங்கள். பெண் யானை 50 வயது வரை கருத்தரித்து குட்டிகளை ஈனும்.
வயது வந்த ஆண் யானை கூட்டத்தை விட்டு விலகி தனியே சுற்றித்திரியும்.

யானைகளுக்கும் உணர்வுகள் உள்ளது, இவை சோகம், மகிழ்ச்சி, எச்சரிக்கை மற்றும் இறக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

Ad image

யானையின் சத்தம் “பிளிறல்” என்று அழைக்கப்படும், இது 9 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மற்றொரு யானையால் கூட கேட்க முடியும்.

யானையில் மிகவும் சிறப்பானது அவற்றின் அந்த நீளமான தும்பிக்கைதான், இந்த தும்பிக்கையில் 40,000 நரம்புகள் உள்ளது. இவற்றின் தந்தங்கள் இரண்டும் சம அளவில் இருக்காது.

யானையின் 60 தமிழ் பெயர்கள்
யானையின் தும்பிக்கையில் உள்ள நரம்புகள்

விலங்கினங்களில் மிகவும் பெரியது யானை, ஆனால் அவற்றிற்கு எறும்புகளும், தேனிக்களுமே எதிரிகள்.

தற்போது உள்ள கணக்கெடுப்பின் படி ஆப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சமும் ஆசிய யானைகளின் எண்ணிக்கை 50,000 முதல் 1,00,000 வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இவற்றில் இந்தியாவில் உள்ள மொத்த யானைகள் எண்ணிக்கை 28,000.

யானையில் மூன்று சிற்றினங்கள் உள்ளன

  • ஆப்பிரிக்கப் புதர் வெளி யானை
  • ஆப்பிரிக்கக் காட்டு யானை
  • ஆசிய யானை

ஆப்பிரிக்கப் புதர் வெளி யானை

மற்ற இரண்டு யானைகளை விட அளவில் பெரியவை. பெரும்பாலும் இவை மரம், இலை, செடி கொடிகளையே உணவாக உட்கொள்கின்றன. மரங்களின் கிளைகளை உடைத்து சாப்பிட அதன் கடைவாய் பற்களையே பயன்படுத்துகிறது.

யானையின் 60 தமிழ் பெயர்கள்
ஆப்பிரிக்கப் புதர் வெளி யானை

அதிகபட்சமாக ஆப்பிரிக்க யானைகள் 5 டன் எடை வரை வளரக் கூடியவை.

இவற்றில் ஆண் யானைகளின் உயரம் 3.2 மீட்டர் மற்றும் அதன் எடை 6 டன் வரை இருக்கம். பெண் யானையின் உயரம் 2.6 மீட்டர் மற்றும் அதன் எடை 3 டன் வரை இருக்கும்.

ஆப்ரிக்க யானைகளின் மிக பெரிய காதுகள் அவற்றின் உடல் வெப்பத்தை குறைக்கிறது.

ஆப்பிரிக்கக் காட்டு யானை – அழியும் தருவாயில் உள்ளது

இது ஆப்ரிக்க யானையின் மற்றொரு இனமாகும், இவை பெரும்பாலும் மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும்.

யானையின் 60 தமிழ் பெயர்கள்
ஆப்பிரிக்கக் காட்டு யானை

இவை சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன. மற்ற இரண்டு யானைகளை விட உருவத்தில் ஆப்பிரிக்க காட்டு யானைகள் சிறியவை.

இதன் முன் கால்களில் ஐந்து நகங்களும், பின் கால்களில் நான்கு நகங்களும் உள்ளன. மேலும் இதன் தந்தங்கள் நேராகவும் கீழ்நோக்கியும் பார்த்து அமைந்திருக்கும்.

- Advertisement -

ஆண் யானையின் எடை 4 டன்னில் இருந்து 7 டன் வரை இருக்கும். பெண் யானையின் எடை 2 டன் முதல் 4 டன் வரை இருக்கும்.

சமையலில் நல்லெண்ணெயின் பயன்கள் பற்றி அறிவீர் – 👈 இதையும் படியுங்கள்

ஆசிய யானை

இவை பெரும்பாலும் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, நேபாளம், தாய்லாந்து மற்றும் இந்திய சீன தீபகற்ப பகுதிகளில் பெரும்பாலும் காணப்படுகின்றன.

ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகளை விட அளவில் சிறியவை. இவற்றில் ஆண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்கும் ஆனால் பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. இருப்பினும் கூட சில பெண் யானைகளுக்கு அரிதாகவே தந்தம் காணப்படுவது உண்டு.

யானையின் 60 தமிழ் பெயர்கள்
ஆசிய யானை குடும்பம்

ஆசிய யானையின் காது மடல்கள் ஆப்ரிக்க யானைகளை விட சிறியவை. வளர்ந்த யானைக் காதுகளின் மேல் ஓரம், ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும்.

இவை 7 ல் இருந்து 12 அடி உயரம் வரை வளரக்கூடியவை. ஆசிய யானையின் எடை 3௦௦௦ முதல் 5௦௦௦ கிலோ கிராம் வரை இருக்கும்.

ஆசிய யானையின் முன்னங்காலில் 5 நகமும், பின்னங்காலில் 4 நகமும் இருக்கும். இவற்றின் முதுகு சற்று உயர்ந்து மேடாகவும், நெற்றியில் இரு மேடுகளும் காணப்படும். துதிக்கையின் நுனியில் மேல் நோக்கியவாறு ஓரிதழ் மட்டுமே காணப்படும்.

ஆசிய யானையின் தும்பிக்கை நீளம் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை இருக்கும். இதில் ஏறத்தாழ 4 லிட்டர் நீர் வரை உறிஞ்சுக் கொள்ள முடியும்.

யானையின் தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதால் இவ்வினம் அழிந்துகொண்டே வருகிறது.

யானையின் தமிழ் பெயர்கள்

யானைகலுக்கு அந்த காலத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பெயர்களை வைத்து அழைத்துள்ளனர் அவற்றில் சில

  • அத்தி
  • அறுகு
  • அஞ்சனாவதி
  • அரசுவா
  • ஆம்பல்
  • இபம்
  • இம்மடி
  • உம்பல்
  • உவா
  • எரும்பி
  • ஒருத்தல்
  • ஓங்கல்
  • கடிவை
  • கயம்
  • கரிணி
  • கரேணு
  • களபம்
  • கரையடி
  • குஞ்சரம்
  • கும்பி
  • கைபுலி
  • சிந்துரம்
  • சுண்டாலி
  • சூகை
  • தந்தாவளம்
  • தந்தி
  • தகர்
  • தாமம்
  • திண்டி
  • தும்பி
  • தூங்கல்
  • தெள்ளி
  • தோல் நாகம்
  • நால்வாய்
  • நூழில்
  • பகடு
  • புகர் முகம்
  • புழைக்கை
  • பூட்கை
  • பெருமா
  • பொங்கடி
  • போதகம்
  • வயமா
  • வல்விலங்கு
  • வழுவை
  • வாரணம்
  • விரமலி
  • வேதண்டம்
  • மதகயம்
  • மதமொய்
  • மதாவளம்
  • மந்தமா
  • மருண்மா
  • மறமலி
  • மாதிரம்
  • மாதங்கம்
  • மொய்
  • கைம்மா
  • வேழம்
  • களிறு

அழியும் தருவாயில் உள்ள அரிய விலங்குகள் – 👈 இதையும் படியுங்கள்

பெண் யானையின் தமிழ் பெயர்கள்

  • அத்தினி
  • கரிணி
  • பிடி
  • வடவை

யானை – கன்று

யானையின் குட்டி “கன்று” என அழைக்கப்படும்

  • கயந்தலை
  • கயமுனி
  • துடியடி போதகம்
  • கரிசரம்
  • வனசரம்
  • குழவி

யானை நிற்கும் இடத்திற்கு தமிழ் பெயர்கள்

  • வாரி (கூடம்)
  • ஆலயம்
  • ஒளி

யானை கூட்டத்தின் தமிழ் பெயர்கள்

  • தடம்
  • யூதம்
  • கடகம்

யானையின் கொம்புக்கு உள்ள தமிழ் பெயர்கள்

  • எயிறு
  • கோடு
  • தந்தம்
  • கரீரம்

நான் அறிந்த மற்றும் படித்த பெயர்களை இங்கு அளித்துள்ளேன், உங்களின் கருத்து மற்றும் மேலும் பெயர்கள் உங்களுக்கு தெரிந்தால் இங்கே பதிவிடுங்கள்.

TAGGED:
Share This Article
Leave a Comment