வெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துங்கள் |
ஜப்பானியர்களிடம் ஒரு பொதுவான நல்ல பழக்கம் ஒன்று உள்ளது, அது தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீரை அருந்துவது ஆகும். அந்த பழக்கம் அவர்களை மற்ற நாட்டு மக்களிடம் இருந்து மிகவும் வேறுப்படுத்தியே வைத்துள்ளது.
இந்த நல்ல பழக்கத்தை அவர்கள் பல தலைமுறைகளாக அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றினைத்து வைத்துள்ள காரணத்தினால் தான் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களை காட்டிலும் இங்குள்ள மக்களுக்கு உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் குறைவாக உள்ளது.
தண்ணீரை அருந்துவது ஏன் மிகவும் அவசியம் ?
மனித உடலானது 70 சதவீதம் வரை தண்ணீரால் நிரம்பியுள்ளது எனவே நாம் நம் உடலை புத்துணர்ச்சியாகவும் ஆரோகியமாகவும் வைத்துக்கொள்ள அவ்வப்போது நீரை அருந்துவது மிகவும் அவசியமாகும்.
அப்படி நீரை நாம் முறையாக எடுத்துக்கொள்ள தவறும் போது ஏற்படும் உடல் வறட்சியால் முடக்கு வாதம், ஒற்றை தலைவலி, மூலம், மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் அழற்ச்சி, சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம், காசநோய் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
எனவே காலையில் எழுந்ததும் முறையாக நீரை எடுத்துக்கொள்வதால் நாம் நம் உடலை பல உபாதைகளில் இருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ள இயலும்.
தண்ணீரை மருந்தாக எப்படி பயன்படுத்துவது ?
நம் உடலில் உள்ள பல உபாதைகள், கண் சமந்தமான நோய்கள் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகளை நீரின் மூலமே குணப்படுத்த முடியும் என்று நிரூபணமாகியுள்ளது.
கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி தங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள்.
- தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்க்கு முன் 160 மில்லி லிட்டர் தண்ணீரை நான்கு முறை குடிக்க வேண்டும்.
- அடுத்த 45 நிமிடத்திற்கு வேறு ஏதும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
- சாப்பிடுவதற்க்கு குறைந்தது 30 நிமிடத்திற்க்கு முன் நீரை அருந்துவது அவசியமாகும் ஆனால் சாப்பிடுவதற்க்கு இடையில் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- ஆரம்பத்தில் நான்கு டம்ளர் நீரை குடிக்க சிரமம்மாக இருப்பின் முதலில் ஒரு டம்ளர் நீரில் இருந்து குடிக்க பழகுங்கள் பின் 640 மி.லி தண்ணீரை அடையும் வரை பழகுங்கள்.
முடிவுகள் எப்பொழுது தெரிய வரும்?
- சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள்: 30 நாட்கள் வரை இப்படி தொடருங்கள்.
- மலச்சிக்கல் மற்றும் குடல் அழற்ச்சி நோயாளிகள் : 10 நாட்கள் வரை இப்படி தொடருங்கள்.
- காசநோய் உள்ளவர்கள் 90 நாட்கள் வரை இப்படி தொடரவும்.
வெறும் வயிற்றில் நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்:
உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவுகிறது:
வெறும் வயிற்றில் தண்ணீரை அருந்தும் போது அது இயற்கையாகவே நம் குடலின் இயக்கத்தை தூண்டுகிறது. இரவில் நம் உடல் தன்னை சரிசெய்து வெளியேற்றிய நச்சுக்களை அனைத்தையும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தும் நீரால் கழிவாக வெளியேற்றி நம் உடலை புதிதாகவும், ஆரோக்கியமாவும் மாற்றிவிடுகிறது. மேலும் புதிய இரத்த செல்கள் மற்றும் புதிய தசை செல்கள் உற்பத்தி இதனால் அதிகரிக்கிறது.
வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது:
மிகவும் முக்கியமாக வெறும் வயிற்றில் நீரை அருந்துவதால் உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் 24 சதவீதம் வரை அதிகரிக்கிறது. வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பதால் உணவு கட்டுப்பாடு வைத்துள்ளவர்களுக்கு அவர்களின் உணவு மிகவும் வேகமாக செரிக்கச் செய்யவும் தினமும் அதே பழக்கத்தை கடைப்பிடிக்கவும் உதவுகிறது. வெறும் வயிற்றில் அருந்தும் நீரால் பெருங்குடல் பகுதி சுத்தம் செய்யப்படுகிறது இதனால் அதிகளவு ஊட்டச்சத்து பெருங்குடலால் உறிஞ்சப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
தேவையற்ற உடல் எடை:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தப்படும் நீரால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடுகிறது இதனால் செரிமான மண்டலத்தின் திறன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக நாம் குறைவான பசியை உணர்வோம் எனவே குறைவான உணவை மட்டுமே எடுத்துக்கொள்வதால் அதிகளவு உணவின் மூலம் ஏற்படும் தேவையற்ற உடல் எடை தவிர்க்கப்படுகிறது.
நெஞ்செரிச்சல்:
நெஞ்செரிச்சல் என்பது வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மையால் ஏற்படுகிறது. வெறும் வயிற்றில் நீரை அருந்தும் போது அது வயிற்றின் மேற்புறத்தில் உள்ள அமிலத்தை கீழே கொண்டு சென்று நீர்த்துப்போக செய்துவிடும் எனவே நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
பளபளப்பான சருமம்:
உடல் வறட்சி தோலில் பல சுருக்கங்களையும் துளைகளையும் ஏற்படுத்துகிறது. ஒரு ஆய்வில் தினமும் வெறும் வயிற்றில் 500 மி.லி நீரை அருந்தும் போது சருமத்தில் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது என கண்டறிந்துள்ளனர்.
சிறுநீரக கற்கள்:
சிறுநீரக கற்கள் மற்றும் சிறு நீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை தவிர்க்க தினமும் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நீரை அருந்துங்கள் அவ்வாறு அருந்தும் போது சிறுநீரக கற்கள் ஏற்பட காரணமான அமிலங்களை நீர்த்துப்போக செய்து விடுகிறது.