தீபாவளி என்றால் வெடிதான் முதலில் நம் எண்ணத்திற்கு வருவது. அப்படி வெடிக்கும் வெடிகளில் பல வகையான வெடிகள் ஒவ்வொரு தீபாவளி அன்றும் புதிதுபுதிதாக வெளிவரும் அப்படி தான் இந்த பாம்பு மாத்திரையும். தற்போது அனகொண்டா வகை பாம்பு மாத்திரை என்ற புதிய இரகம் கூட வந்துள்ளது. அவ்வாறு வந்த அனகொண்டா வகை எவ்வாறு உருவாகிறது என்பதை காண்போம்.
பாம்பு மாத்திரை:
சிறிய நெருப்பு பட்டவுடன் உயரத்தில் உயர்ந்து பெரும் புகையுடன் சரசர வென்று ஒரு பாம்பு போல வருவதால் தான் இதை பாம்பு மாத்திரை என்று கூறுகிறோம். சில நாடுகளில் இது யானை தந்த வெடி என்றும் கூறுவர்.
பாம்பு மாத்திரை |
வேதியியல் நிகழ்வு:
வெப்பவீங்கி (Intumescent) என்ற நிகழ்வு தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
நெருப்பு வைத்த உடன் தரையில் இருந்து எவ்விதமான நெருப்பு, சத்தம், மற்றும் பொறிகள் வெளியேறாமல் புகையை மட்டுமே வெளியேற்றும் நிகழ்வு தான் இது.
வெப்பவீங்கி நிகழ்வானது பல மடங்கு விரிவடையும் பொருள்களை குறிக்கும். இந்நிகழ்வின் போது ஒரு பொருளின் கன அளவு பல மடங்கு அதிகரித்து அதன் அடர்த்தி பாதியாக குறையும்.
சோடியம் பை-கார்பனேட் இது தான் அந்த பாம்பு மாத்திரையின் உண்மையான பெயர். சோடியம் பை-கார்பனேட் எரிந்து கார்பன்டை ஆக்ஸைட் மற்றும் சர்க்கரை ஒரு கார்பன் நிறைந்த சாம்பலை உருவாக்குகிறது. இவையே பொதுவாக பாம்பு மாத்திரைகளில் பயன்படுத்தப் படுகிறது மேலும் இவற்றில் லின் கொட்டை எண்ணெய் அல்லது நாப்தலின் கூட பயன்படுத்தப் படுகிறது.
லின் கொட்டை எண்ணெய் |
ஆனால் பாரம்பரிய Pharaoh’s serpent தான் மிகவும் பெரிய மற்றும் அற்புதமான
பாம்பினை உருவாக்கும்.அதுவும் அதில் பயன்படும் மெர்குரி தையோ 11 சயனைடு அளவை பொருத்து மாறுபடும்.