8300 அடி ஆழத்தில் வாழும் மீன்வகை கண்டுபிடிப்பு

1 Min Read

நத்தை மீன்

நத்தை மீன்கள் (அ) கடல் நத்தை என்றும் சில சமயங்களில் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் ஆர்டிக் மற்றும் அண்டார்டிக்காவின் கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. கடலின் மேற்பரப்பில் 5 மீட்டர் முதல் 8300 மீட்டர் ஆழம் வரை இந்த மீன்கள் காணப்படுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு கீழே மீன்கள் இருப்பது என்ன ஆச்சரியம்?

பொதுவாக கடலின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க கடலின் அழுத்தமும் அதிகரிக்கும் எனவே குறிப்பிட்ட அழுத்த அளவை தாண்டி நாமோ அல்லது வேறு எதாவது ஒரு உயிரினம் செல்லும்போது அவற்றின் உடல் நசுக்கப்பட்டு இறக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இயற்கையின் அற்புதத்தில் பல மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கடலின் அடி ஆழம் வரை சென்று உயிர்வாழும் திறனை கொண்டுள்ளன.

8300 அடி ஆழத்தில் வாழும் மீன்வகை கண்டுபிடிப்பு

ஆய்வு:

மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் ஜப்பானின் கடலில் இருந்து 8336 மீட்டர் ஆழத்தில் உயரினங்கள் ஏதாவது வாழ்கின்றனவா என்பதை ஒரு சிறிய தானியங்கி ரோபோவுடன் சில மீன் துண்டுகளை அதன் கையில் கட்டி அனுப்பியுள்ளனர்.

ஆய்வாளர்கள் எதிர்பார்த்தது போலவே அங்கு நத்தை மீன் உயிர்வாழ்வதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வானது கடலின் அடியில் எவ்வளவு மீன்கள் உள்ளன என்பது பற்றிய ஆய்வின் ஒருபகுதியாக அமைந்துள்ளது. இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளர் ஜேமிசன் கூறுகையில் “நாங்கள் இந்த நத்தை மீன்களை 15 வருடங்களாக ஆராய்ந்து வருகிறோம், இந்த மீனில் பல மர்மங்கள் நிறைந்துள்ளன அதில் ஆழ்கடலில் வாழ்வதும் ஒன்று“.

- Advertisement -

முந்தைய ஆய்வு:

இதற்கு முன் நத்தை மீன்கள் கடலின் மேற்பரப்பில் இருந்து 8178 மீட்டரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8178 மீட்டர் ஆழம் என்பது 1600 யானைகளின் எடைக்கு சமமான அழுத்தத்தை உங்களின் மீது செலுத்துவதற்கு சமமாகும்.

முந்தைய ஆய்வில் எடுத்தப் படம்:

Ad image
Share This Article
Leave a Comment