வயிற்றில் முட்டையுடன் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த சிட்டுக்குருவி வகை பறவை இனம் கண்டுபிடிப்பு
கண்டறிந்த இடம்:
சீனாவில் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த சிட்டுக்குருவி போன்ற ஒரு வகை பறவை இனத்தை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
புதைப் படிமம்:
110 மில்லியன் வருடத்திற்க்கு முன் சீனாவில் வாழ்ந்த ஒருவகை பறவை இனம் தன் முட்டைகளுடன் படிமமாகக் சீனாவை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளார் அலிடா கண்டறிந்துள்ளார்.
புதைப் படிமமானது அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக முட்டைகள் உடைந்து நொறுங்கிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:பெரியவர்கள் ஊஞ்சலில் உறங்கினால் ஏற்படும் விளைவுகள் என்ன?
ஆராய்ச்சி:
அலிடா இந்த படிமத்தை முதலில் கண்டறிந்த பின் படிமம்மானது பறவை உலகில் மிகவும் புதியதாக இருந்ததால் அதன் உடலை ஆய்விற்க்கு உட்படுதினார் அப்போது பறவை உடலானது மற்ற பறவைகளை விட சற்று மாறுபட்டு காணப்பட்டதை அறிந்த அவர் பறவையின் எலும்புகளுக்கும் சதைக்கும் இடையில் இருந்த பகுதியை ஆராய்ந்த போது அது அந்த பறவையின் முட்டை எனக் கண்டறிந்தார்.
இதுவே ஒரு பறவை முட்டையுடன் படிமமாக முதல் முறையாகும்.
இனம்:
புதிதாக கண்டறியப்பட்ட இந்த பறவைக்கு “அவிமியா ஸிச்வேஜெரா” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இன்று காணப்படும் பறவைகளின் முட்டைகளை ஒப்பிடும் போது இந்த பறவையின் முட்டை வெளிப்புற தோல் இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது.இந்த இரண்டு அடுக்குகளும் மிகவும் மெல்லிய அடுக்காக அமைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இந்த அடுக்குகள் மையக்கருவை எவ்விதமான நோய் கிருமிகளும் பாதிக்காத வண்ணம் அமைதுள்ளது. இதை போன்ற இரண்டு அடுக்குகள் கொண்ட முட்டை இனம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:இஸ்ரோவுக்கு மங்கல்யாண் அனுப்பிய செவ்வாயின் புகைப்படங்கள்
தலைப்புகள்
What is your reaction?
0
Excited
0
Happy0
In Love0
Not Sure0
Silly