தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்

4 Min Read

10 ஆபத்தான உணவு முறைகள்

தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள் 
சோம்பலும் நாகரீகமும் இன்று பல உடல் உபாதைகளை நம்மில் விதைத்துவிட்டது,  சோம்பலினால் இன்று பலர் உணவு சமைப்பதையே விடுத்து உணவகங்களில் இருந்து பெற்று உண்ணுகின்றனர், இதனால் அவர்களின் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி சிறிதும் சிந்திப்பது கிடையாது. தற்போது நாகரீக வளர்ச்சியால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவே பல நோய்களுக்கு வழிவகை செய்கிறது. 

கண்டிப்பாக தவிர்க்கவேண்டிய 10 உணவு முறைகளை

  • வாழையுடன் பால் 
  • இறைச்சியுடன் பாலாடைக்கட்டி 
  • உணவுக்குப்பின் பழங்கள் 
  • தயிருடன் பழங்கள் 
  • பிஸ்ஸாவுடன் சோடா 
  • உணவுடன் குளிர்ந்த நீர் 
  • இறைச்சியுடன் உருளை 
  • ஆப்பிள் சாறுடன் மருந்துகள் 
  • செரல்ஸ் உடன் ஆரஞ்சு பழச்சாறு 
  • இரண்டு உயரிய புரத உணவுகள் 

வாழையுடன் பால்

வாழையுடன் பால் என்பது மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான சேர்க்கையாகும். இரண்டுமே வயிற்றில் செரிமானம் ஆக வெகுநேரம் எடுத்துக்கொள்ளும்  உணவுகள், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளும் போது செரிமானம் ஆகவில்லையெனில் சிறிது சீரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்  இது செரிமான மண்டலத்தை சரி செய்ய உதவும். 
தவிர்க்கவேண்டியவை : வாழைப்பழ மில்க்ஷேக் (Banana Milkshake)
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
வாழையுடன் பால் 

இறைச்சியுடன் பாலாடைக்கட்டி

தற்போது உணவகங்களில் பாலாடைக்கட்டி (Cheese) அதிகம் பயன்படுத்தப் படுகிறது,  இந்த பாலாடைக்கட்டி ஆனது புரதம் அதிகம் உள்ள ஆகும் இதனை நாம் இறைச்சி போன்ற அதிக புரதம் உள்ள உணவுடன் சேர்த்து உண்ணும் போது செரிமான மண்டலத்தால் விரைவில் செரிக்க இயலாமால் அப்படியே வயிற்றில் தங்கிவிடும் அபாயமும் உள்ளது.
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
பாலாடைக்கட்டி

உணவுக்குப்பின் பழங்கள்

ஒரு பெரிய விருந்துக்குப்பின் நாம் அனைவரும் செய்யும் ஒரு தவறு என்பது எதாவது ஒரு பழத்தை உண்பது தான், உதாரணமாக வாழைப்பழம். இது மிகவும் தவறானது ஆகும் உணவுக்குப்பின் பழங்களை எடுத்துக்கொள்ளும் போது பழங்கள் உணவை செரிக்க விடாமல் செய்கிறது மேலும் உணவானது செரிக்காமல் அதிலுள்ள சர்க்கரையை அப்படியே வயிற்றில் தங்கச் செய்கிறது.  மாறாக சாப்பிட்ட அரைமணி அல்லது ஒரு மணி நேரத்திற்கு பின் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
உணவுடன் பழங்கள் 

தயிருடன் பழங்கள்

உயரிய புரதம் உடைய தயிருடன் நாம் பழங்களை எடுத்துக்கொள்ளும் போது தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் பழங்களில் உள்ள நார்ச்சத்துக்களை செரிக்க விடாமல் செய்து அதில் உள்ள சர்க்கரையை நச்சாக மாற்றிவிடும் தன்மை உடையது. இதனால் சளி, ஜலதோஷம், மற்றும் இருமல் போன்றவைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பிஸ்ஸாவுடன் சோடா

பீசா உண்ணும் போது சோடா குடிக்காமல் இருப்பவர்கள் யாரும் கிடையாது, ஆனால்  இது மிகவும் ஆபத்தான சேர்க்கையாகும், பிஸ்ஸாவில் உள்ள புரதம் மற்றும் ஸ்ட்ராசை செரிக்க உடல் அதிக ஆற்றலை எடுத்துக்கொள்கிறது மேலும் சோடாவில் உள்ள சர்க்கரை செரிமான மண்டலத்தை மிகவும் மெதுவாக செரிக்க செய்துவிடும் தன்மை உடையது. இது இரண்டும் சேர்ந்து செரிமான மண்டலத்தை பலமிழக்கச் செய்துவிடுகிறது. 
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
பிசாவும் சோடாவும்

உணவுடன் குளிர்ந்த நீர்

உணவுடன் குளிர்ந்த நீர் அல்லது பழச்சாறை எடுத்துக்கொள்வது என்பது மிகவும் தவறான செயலாகும். உண்ணும் போது நீரானது உணவில் உள்ள புரதம், கார்போ ஹைட்ரேட், மற்றும் கொழுப்புகளை  உடைக்கும் அமிலத்தை நடுநிலை செய்துவிடுகிறது , இதனால் உணவு செரிக்க இயலாமல் போய்விடுகிறது. மாறாக  உணவிற்கு இடையில்  சிறிது சுடு நீரை குடிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உணவிற்கு 10 நிமிடத்திற்கு முன் நீரை அருந்த வேண்டும். 
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
குளிர்ந்த நீரும் உணவும் 

இறைச்சியுடன் உருளை

உருளையில் உள்ள கார்போஹைட்ரேட்  இறைச்சியில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளை செறிக்கவிடாமல் செய்வதால் செரிமான மண்டலத்தின் செயல் திறன் குறைந்துவிடுகிறது.
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
இறைச்சியும் உருளையும் 

ஆப்பிள் சாறுடன் மருந்துகள்

உடல் நிலை சரியில்லாத போது சிலர் உண்ண இயலாமல்  ஆப்பிள் அல்லது பால் போன்றவற்றை உண்டுவிட்டு மருந்துகளை எடுத்துக்கொள்வர் இது மிகவும் ஆபத்தானதாகும். ஆப்பிளில் உள்ள அமிலமானது  (மேலிக் அமிலம்)  இரத்த நாளங்களில் செல்லும் மருந்தின் வீரியத்தை 70% வரை குறைத்துவிடுகிறது. இதனால் மருந்தின் பயன் இருக்காது. 
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
மருந்துகளும் ஆப்பிள் சாறும்

செரல்ஸ் உடன் ஆரஞ்சு பழச்சாறு

சிலர் தற்போது உணவிற்கு பதில் காலையில் செரல்ஸ் போன்றவற்றை ஆரஞ்சு பழச்சாறுடன் எடுத்துக் கொள்கின்றனர்,  இதனால் அவர்களுக்கு காலையில் தேவையான ஆற்றல் உண்மையில் கிடைப்பது கிடையாது. காரணம்  ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் அமிலம் கார்போஹைட்ரேட்டை உடைக்கும் நொதிகளின் செயல்பாட்டை குறைத்து விடும். எனவே உடல் அசதி, சௌகரியம் அற்ற நிலை போன்றவை ஏற்படும். 
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
பாலும் ஆரஞ்சும்

இரண்டு உயரிய புரத உணவுகள்

உயரிய புரதங்களை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது அவற்றை  செரிக்க செரிமான மண்டலம் மிகவும் சிரமப்படும் எனவே முட்டையுடன் இறைச்சியை எடுத்துக்கொள்வதை தவிர்த்து மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
உயரிய புரதங்கள்

மீனுடன் தயிர் 

மீனுடன் பால் பொருட்கள் கலந்து  உண்ணக் கூடாது இரண்டுமே உயரிய புரதம் உடைய உணவுகள் ஆகும்,  இவை செரிப்பதற்கு வெகு  நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்
Share This Article
Leave a Comment