உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டுபிடிப்பது எவ்வாறு | SciTamil
உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டுபிடிப்பது எவ்வாறு
உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டறிய எளிய வழிமுறைகள் பல உள்ளன அவற்றில் சில பின்வருமாறு.
1.பால், தயிர் மற்றும் வருகடளைத் தூள்:
பால், தயிர் மற்றும் வருகடளைத் தூள் போன்றவற்றில் ஸ்டார்ச் மாவை கலந்து விடுவார்கள். இதில் உள்ள கலப்படத்தை கண்டறிய நம் காயத்திற்கு சுத்தம் செய்யும் டின்ஜெர் எடுத்து ஒரு சில துளிகளை விடும் போது நீல நிறம் தோன்றினால் அவற்றில் கலப்படம் உள்ளது.
2.காப்பித்தூள்:
காப்பித்தூளில் பெரும்பாலும் வறுத்தெடுத்த பேரீச்சம்பழக் கொட்டைகள் மற்றும் புளியங்கொட்டைகளை அரைத்து பொடி செய்து கலப்பதுண்டு இதனைக் கண்டறிய சலவைத்தூளை தண்ணீரில் கரைத்துக் கொண்டு அதில் காப்பி தூளை ஒரு கரண்டி போட்டு கலக்கினால் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் தோன்றும். இது கலபடத்திற்கு ஆதாரமாகும்.
3.தேயிலை தூள் :
பழைய மற்றும் பயன்படுத்திய தேயிலைத்தூளை சற்றும் சுத்தம் செய்து அதனுடன் சிறிது வண்ணம் சேர்த்து புதிய தேயிலைத்தூளுடன் கலப்பதுண்டு இதனை கண்டறிய வடிக்கட்டும் தாளை எடுத்துக்கொண்டு அதில் தேயிலைத்தூளை நீரில் கரைத்து ஊற்ற வேண்டும் அவ்வாறு ஊற்றும்போது வடித்தாளில் சிறிய மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிற புள்ளிகள் தென்பட்டால் அதில் கலப்படம் உள்ளது.
4.சர்க்கரை :
வெள்ளை சர்க்கரையில் ரவை சுண்ணாமபுத்தூள் போன்றவை கலப்பதுண்டு இவற்றை கண்டறிய சர்க்கரையை சிறிது நீரில் கரைத்தால் சுத்தமான சர்க்கரை நீரில் கரைந்துவிடும், மீதமுள்ள கலப்படப் பொருட்கள் அடியில் தங்கிவிடும்.
5.பருப்பு, ஐஸ் கிரீம், சர்பத் :
பருப்பு, ஐஸ் கிரீம், சர்பத், புளி போன்றவற்றில் நிலக்கரியில் இருந்து கிடைக்கும் “மெத்தனேல் எல்லோ ” என்ற சாயப் பொருளை கலப்பர் அதை கண்டறிய அந்த பொருட்களை சுடுநீரில் போட்டால் நீர் அழுக்கு நிறத்தில் மாறும், மேலும் அதனை உறுதி செய்ய HCL திரவம் ஒரு சொட்டு விட்டால் கத்தரிப்பூ நிறத்தில் நீர் மாறும்.
What is your reaction?
0
Excited
0
Happy0
In Love0
Not Sure0
Silly
Super