காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது

2 Min Read
காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது

காற்றாலை

காற்றாலை இறக்கைகள்: 

பொதுவாக காற்றலையில் மூன்று மற்றும் நான்கு இறக்கைகள் காணப்படுவது வழக்கம். இவற்றில் இறக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் செயல்திறனும் அதிகரிக்கும்.
உங்களுக்கு எப்போதாவது காற்றாலையை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் இதனை தவறாமல் கவணியுங்கள். முதலில் லேசான காற்று வரும்போது மெதுவாக சுழலத் தொடங்கி பின் வரும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப மிகவும் வேகமாக சுழலத் தொடங்கும் அதன் காரணம் இறக்கையின் வடிவம் (Aerodynamic Design ) தான்.

Read Must:சம்மணமிட்டு அமர்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஆராய்சி முடிவுகள் வெளியீடு !

  • காற்றுச் சுழலி (wind turbine) என்பது காற்றின் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக் மாற்ற உதவும் ஓரு இயந்திரம் ஆகும். காற்றுச்சுழலியானது காற்று மின்னேற்றியில் மின்சாரத்தை சேமிக்க பயன்படுகிறது.
  • காற்றாலை மூன்று வகைப்படும் அவற்றில் இரண்டு பக்கவாட்டில் சுற்றும் காற்றாலைகள் , ஒன்று மேலும் கீழுமாகச் சுற்றும் காற்றாலை ஆகும்.

காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது
மாறுபட்ட வகை காற்றாலை
  • காற்றாலையின் ரெக்கையின் குறுக்குவெட்டு வடிவமானது விமான ரெக்கையின் குறுக்குவெட்டு வடிவத்தை ஒத்துக் காணப்படும். காற்றாலையின் ரெக்கையானது வீசும் காற்றின் அழுத்தம் மாறுபாடு காரணமாக இயங்குகிறது.
  • ஒருமுறை இது இயங்க ஆரம்பித்துவிட்டால் அதன் காற்றே அதை வேகமாக இயங்கி மின்னுற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.

Read Must:பெண்கள் அணியும். அணிகலன்களும் காரணங்களும்


மூன்று இறக்கைகள் ஏன் ? 

ஒற்றை இறக்கை (Single Wing)

உண்மையில் ஒற்றை இறக்கை அமைப்பு தான் அதிக திறன் வாய்ந்தது ஆனால்  இது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. அதிகப்படியான அதிர்வுகள் காரணமாக முழு காற்றாலையும் உருக்குலையும் நிலை ஏற்படும் வாய்புகள் உள்ளன.
காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது
ஒற்றை இறக்கை அமைப்பு 

இரட்டை  இறக்கை  அமைப்பு ( Dual Wing System):


இரண்டு இறக்கை அமைப்பு ஆரம்பக் காலக்கட்டதில் உபயோகிதுள்ளனர் பொதுவாக காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் தான் காற்றலை அமைக்கப்படும். அப்போதுதான் காற்றின் வேகத்திற்கு ஏற்ப சுழல இயலும். இரண்டு இறக்கைகள் இருக்கும்போது காற்று எந்த திசையில் வீசினாலும் அந்த திசைக்கேற்ப அதனால் திரும்பி சுழல இயலும் ஆனால் இரண்டு இறக்கை அமைப்புக்கு அதிக திறன் மற்றும் நிலைத்தன்மை கிடையாது, எனவே இது விரைவில் அதிக அதிர்வு காரணமாக முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது.
காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது
இரட்டை இறக்கை அமைப்பு 

மூன்று இறக்கை (Tri Wing ):

மூன்று இறக்கைகள் பொருத்தும் போது அதனால் எளிமையாக எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பி மிகவும் வேகமாக சுழலும் மேலும் இது எவ்வித அதிர்விக்கும் உள்ளாகாமல் இயங்கும் .
காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது
இறக்கை அமைப்பு 

காரணம் :

ஒரு இறக்கை பக்கவாட்டில் உள்ள போது மற்ற இரண்டு இறக்கைகளும் பக்கவாட்டு விசையை ஏற்ப்படுத்தி வேகமாக சுழல வைக்கிறது மேலும்  நிலை தன்மையும் அதிகரிக்கும் இதன் காரணமாகவே மூன்று இறக்கைககள் பயன்படுத்தப் படுகிறது..  
காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது
அமைப்பு

Read Must:

    Share This Article
    Leave a Comment