இதயம், மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது ஒரு தொடர்ச்சியான இயந்திரம் போல செயல்பட்டு, இரத்தத்தை உடல் முழுவதும் உந்தி, உயிர்வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அப்படிப்பட்ட இதயம் செயலிழந்த 58 வயதுள்ள நபர் ஒருவருக்கு பைவேக்கர் என்ற மத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், செயற்கையாக செய்யப்பட்ட இதயத்தை இதயம் செயலிழந்த நபருக்கு பொருத்தி சாதனைப் படைத்துள்ளனர்.
செயற்கை இதயம்
பைவேக்கர் நிறுவனத்தின் இந்த புதிய செயற்கை இதயம் வணிக ரீதியாக உள்ள செயற்கை இதயங்களை விட மிகவும் திறனுள்ளது எனக் கூறப்படுகிறது. காரணம் இது டைட்டேனியம் என்ற உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுள் பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்கள் எளிதில் தேய்மானமோ துருவோ பிடிக்காதுவாறு இதனை உருவாக்கியுள்ளனர்.
சின்கார்டியா என்ற நிறுவனத்தின் செயற்கை இதயம் தான் அமெரிக்காவின் FDA சான்று பெற்ற முதல் வணிக ரீதியான செயற்கை இதயம் ஆகும்.
இந்த இதயம் உன்மையான இதயத்தை போல துடிக்காது ஆனால் இதயம் செய்யும் வேளைகளை திறன்பட செய்யும் திறன் கொண்டது. இவை அளவில் மிகவும் சிறியது மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தும் வகையில் அமைத்துள்ளது.
செயல்படும் விதம்:
பைவேக்கர் நிறுவனம் உருவாக்கிய செயற்கை இதயத்தின் விளக்கப்படம். (3D)
மேலே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல செயற்கை இதயத்தின் இருபுறமும் இரத்தம் உள்ளே வருவதற்கான இரு வாயில்கள் உள்ளன. பின் உள்ளே வரும் இரத்தம் மின்சுழற்றி வழியாக சென்று வெளியேறும் துளை வழியாக தமனி மற்றும் சிரைக்கு இரத்தம் செலுத்தபடுகிறது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மின் சுழற்றி மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும் காரணம் இதில் உள்ள சுழலும் பகுதி எதனுடனும் தொடர்பில் இல்லாததால் உராய்வு மற்றும் இரத்த செல்களுக்கு ஏற்படும் பதிப்புகளை தவிர்கிறது.
மின்சுழற்றி இயங்குவதுற்கு தேவையான மின்சாரம் உடலின் வெளியே உள்ள ஒரு சிறிய பையின் மூலம் அனுப்பப்படுகிறது. இதற்கு பையில் இருந்து பின் வயிற்றின் வழியாக இதயத்திற்கு ஒரு சிறிய கடத்தியின் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
உடலின் வெளியே உள்ள பையில் இரண்டு மின்கலங்கள் உள்ளன அவை பத்து மணி நேரத்திற்கு தேவையான மின்சாரத்தை இதயத்திற்கு வழங்கும் திறன் கொண்டது. மின்சாரம் குறையும்போது ஒரு மின்கலனை மட்டும் தனியாக கழற்றி மாற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களின் கம்பியில்லா முறையில் மின்சாரத்தை வழங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை இதையத்தையும் மனிதனில் பயன்படுத்த இருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.
யாருக்கு இந்த இதயம் மாற்றாக அமையும் ?
டெக்சாஸ், பேலர் செயிண்ட் லூக்ஸ் மருத்துவ மையத்தில் இதயம் செயலிழந்த நோயாளி ஒருவருக்கு இந்த இதயத்தை பொருத்தி வெற்றி கண்ட மருத்துவர், இதயம் செயலிழந்த நபருக்கு மாற்று இதயம் கிடக்கும் வரையில் இந்த செயற்கை இதயத்தை மாற்றாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்.
இந்த செயற்கை இதயம் எந்தவிதமான கோளாறும் இன்றி எட்டு நாட்கள் நோயாளியின் உடலில் செயல்பட்டதாகவும் (மாற்று இதயம் பொருத்தும் வரையில்), எந்தவித தடங்களும் இன்றி நான்கு வருடங்களுக்கும் மேல் இன்றும் இந்நிறுவனத்தின் ஆய்வகத்தில் உள்ள செயற்கை இதயம் செயல்பட்டு வருவதாகவும் இதனை உருவாக்கிய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.