மணிக்கு 7,00,000 km/hr சாதித்து காட்டிய நாசா | Parker solar probe
பார்கர் சோலார் ப்ராப் (Parker solar probe)
பார்கர் சோலார் ப்ராப் ஒரு செயற்கைக்கோள் ஆகும் இதனை PSB என்றும் சுருக்கமாக அழைக்கலாம். மனிதன் உருவாகிய செயற்கைகோள்களில் இது தான் மிகவும் வேகமானது என்று கூறப்படுகிறது. அதாவது மணிக்கு 7 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த செயற்கைக்கோள் சூரியனின் மேற்பரப்பு பற்றி ஆராய இன்று ஏவப்படுகிறது.
வரலாறு :
2009 ஆம் ஆண்டே இதற்கான் நிதி ஒதுக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டே விண்ணில் செலுத்த திட்டமிட்டது நாசா ஆனால் பல தொழில்நுட்ப காரணங்களால் இந்து தள்ளி சென்றது தற்போது இதன் பனி முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து 2018 ஆம் ஆண்டு ஏவ திட்டமிட்டனர் அதன்படி நேற்று அதன் தொடக்க நேரம் ஆரம்பிக்கப்பட்டு இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
வரலாற்றில் முதன்முதலாக உயிருடன் உள்ள போதே விஞ்ஞானி ஒருவரின் பெயரை செயற்கைக்கோளுக்கு வைப்பது இதுவே முதல் முறையாகும்.
இது யுகன் பார்கர் என்ற நாசா விஞ்ஞானியின் பெயரை இந்த செயற்கைக்கோளுக்கு சூட்டியுள்ளனர்.
கண்னோட்டம்:
PSB தான் உலகிலயே முதலில் சூரியனிக்கு மிக அருகில் செல்லும் முதல் செயற்கைக்கோள் ஆகும். இது சூரியனின் மேற்பரப்புக்கு மிக அருகில் சென்று அதன் மேற்ப்பரப்பு அமைப்பு மற்றும் அதன் காந்த அமைப்பு பற்றி ஆராய ஏவப்படுகிறது.
சுற்றுவட்டப் பாதை:
இதன் சுற்றுவட்டப் பாதையானது ஏழு கோள்களின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து சூரியனை சுற்றி வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
What is your reaction?
0
Excited
0
Happy0
In Love0
Not Sure0
Silly