இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் கண்டிப்பாக பாதிகப்படுள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்….

இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்கள்  கல்லீரல் கண்டிப்பாக பாதிகப்படுள்ளது என்று  மருத்துவர்கள் கூறுகின்றனர்…. 

 liver problems
உடல் என்பது ஒரு வியக்கத்தக்க அமைப்பாகும். உலகத்திலேயே புரியாத சிக்கலான மெஷின் எது என்றால் அது நம் உடலமைப்பு தான். அதனால் கிடைக்கும் பலன்களை போல, அதனால் பல பிரச்சனைகளும் ஏற்படும். உடலை சரிவர பராமரிக்கவில்லை என்றால் இவ்வகை சீர்கேடுகள் ஏற்படலாம். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் வாழும் ஆரோக்கியமற்ற வாழ்வு முறையில் நம்மை பல நோய்கள் தாக்கி கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. உடலில் உள்ள சில முக்கிய அங்கங்கள் இவ்வகை நோய்களால் பாதிக்கப்பட்டால், அது மரணம் வரை கூட முடியும். அப்படிப்பட்ட அங்கங்களில் முக்கியமான ஒன்று தான் ஈரல் என்று அழைக்கப்படும் கல்லீரல்.

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.

இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.
இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.
நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.
பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு ‘ப்ரோத்ரோம்பின்’ என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.
இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.
இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.
அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.
மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.
கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.
கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

உங்கள்  கல்லீரல் கண்டிப்பாக பாதிகப்படுள்ளது என்று  உணர்த்தும் அறிகுறிகள் 

வீங்கிய வயிறு 

கல்லீரலில் இழைநார் வளர்ச்சி என்பது ஒரு ஆபத்தான கல்லீரல் நோயாகும். இந்த நோயால் வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனை மகோதரம் என்றும் அழைப்பார்கள். இரத்தத்திலும் நீர்ச்சத்திலும் வெண்புரதம் மற்றும் புரத அளவு அப்படியே தேங்கிவிடுவதால் இந்த நோய் உண்டாகும். இந்த நோய் உள்ளவர்களை பார்க்கும் போது, கர்ப்பமான பெண் போல் காட்சி அளிப்பார்கள்.

மஞ்சள் காமாலை 

சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறினால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அது கல்லீரலை வெகுவாக பாதிக்கும். சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதால், இரத்தத்தில் பிலிரூபின் உண்டாகும். அதனால் உடலில் இருக்கும் கழிவு வெளியேற முடியாது.

வயிற்று வலி

வயிற்று வலி, அதுவும் மேல் வயிற்றின் வலது புறத்தில் வலி எடுக்கும் போது அல்லது விலா எலும்பு கூட்டின் அருகே அடி வயிற்று பகுதியின் வலது புறத்தில் வலி எடுத்தால், கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

சிறுநீரில் மாற்றங்கள் 

உடலின் இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிக அளவில் இருந்தால், சிறுநீரகத்தின் நிறம் கடும் மஞ்சளாக மாறும். அதற்கு காரணம் பாதிக்கப்பட்ட கல்லீரலால், சிறுநீரகம் மூலம் கழிவுகளை வெளியேற்ற முடிவதில்லை.

சரும எரிச்சல் 

சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டு, அது தொடர்ந்து கொண்டே இருந்து, நாளடைவில் சொறி, சிரங்கு என மாறிவிட்டால் அதுவும் கூட கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான ஒரு அறிகுறியே.மேலும் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை உடலால் கொடுக்க முடியாததால், அந்த இடங்களில் அரிப்பு ஏற்பட்டு திட்டுக்கள் உண்டாகும்.

பசியின்மை 

கல்லீரல் பாதிப்பை கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் அது பசியின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் அளவுக்கு அதிகமாக உடல் எடை குறையும். ஊட்டச்சத்து குறைவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் உடனே ஊட்டச்சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

சோர்வு 

கடுமையான சோர்வு, தசை மற்றும் மன தளர்ச்சி, ஞாபக மறதி, குழப்பங்கள் மற்றும் கோமா போன்ற அறிகுறிகள் கூட கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும்.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல… மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.
அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.
கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.
கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !

இத்தகைய கல்லீரலை காப்பாற்ற செய்யவேண்டிய 5 குறிப்புகள்

  • மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.

  • பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.

  • உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.

  • நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

  • முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Don't Miss 2 Year FREE Subscriptions + Ebooks in Tamil

Subscribe and Listen to Premium Tamil Audio Service without Ads (Premium Audio is currently available on the latest post for trial)

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *