தூக்கம் என்பது ஒரு வரம், அது வருவதை ஏன் நாம் தடுக்க வேண்டும்?
நாம் அனைவரும் தூக்கம் என்ற ஒன்றை தவிர்த்து வேலை வேலை என்று ஓடி கொண்டு உள்ளோம் சிலரோ திரையை பார்ப்பது மற்றும் அலைபேசியை நோண்டுவது என்று வரும் தூக்கத்தை தள்ளி போட்டுகொண்டே செல்வர், இதில் நீங்கள் எந்த வகை என்பதை கிழே பதிவிடுங்கள்.
சரி வாருங்கள் தூக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோம்!.
தூக்கம் ஒரு வரம்:
உண்மையில் தூக்கம் ஒரு வியாதி அல்ல அது ஒரு வரம். ஆம்! நம் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில்தான் செலவிடுகிறோம்.
தெரியுமா ?
ஒரு மனிதன் தன் வாழ் நாளில் 25 வருடத்தை தூக்கத்தில் தான் செலவிடுகிறான்.
இரவில் தூக்கம்:
இரவில் நாம் தூங்கும்போது தான் பல வேலைகள் நம் உடலில் நடக்கிறது. உதாரணமாக வளர்ச்சிதை மாற்றங்கள், எலும்புகள் வலுப்படுதல், காயங்கள் விரைவாக ஆறுவது போன்று மேலும் பல செயல்கள் நாம் தூங்கும்போது தான் நடக்கிறது.
ஆனால் நாம் தூங்காமல் இருந்தால் மேல் குறிப்பிட்ட பல செயல்கள் தடுக்கப்படுகிறது இதனால் நம் உடலையும் அது பாதிக்கிறது.
மிகவும் ஆழ்ந்த தூக்கம் உடையவர்களே மிகவும் மகிழ்ச்சியான மனநிலை உடையவர்களாக உள்ளனர். மேலும் அதிக விழிப்புணர்வுடனும் மன அழுத்தம் போன்றவற்றை எதிர்த்து போராடும் மனநிலையும் உண்டாகிறது.
தாய்பாலில் நுண் பிளாஸ்டிக் துகள்கள்!
தூங்கும் நேரம்:
இளைஞர்கள் சராசரியாக 9 மணி நேரம் தூங்க வேண்டும் ஆனால் ஆராய்ச்சிகளின் படி இளைஞர்கள் 7 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்கள். இதுவே பல காரணங்களுக்கு வழிவகுக்கிறது.
மிகவும் குறைந்த தூக்கம் அதாவது 7 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் உடையவர்களுக்கு பல ஆபத்துக்கள் சூழ்ந்துள்ளன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆய்வின் படி குறைந்த தூக்கம் உடையவர்களுக்கு உணவு பழக்கம் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக மாறிவிடும். சரியான உணவு நேரம் என்ற ஒன்று அவர்களிடத்தில் இருக்காது இதனால் பல பாதிப்புகள் உடலில் ஏற்படும். எப்போதும் அவர்களின் மனநிலை சமநிலையில் இல்லாமல் தடுமாறும்.
தூக்கமின்மையின் காரணம்:
இளைஞர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்களை கூறுவது மிகவும் கடினம் ஆகும். பொதுவாக தூக்கமின்மை இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது.
ஒன்று இரவில் தூங்காமல் அதிக நேரம் அலைபேசி, மடிக்கணினி மற்றும் திரைகளை பார்ப்பது.
இரவில் அதிக நேரம் திரைகளை பார்ப்பதால் அதில் இருந்து வெளியேறும் ஊதா கதிர்கள் கண்களை பாதிக்கும் அது மட்டுமல்லாமல் சூரியனில் இருந்தும் இதே ஊதா கதிர்கள் வெளியேறுகிறது இதனால் நமது மூளை திரையில் இருந்து வெளியே வரும் ஊதா கதிர்களை பகல் என்றே நினைக்கும் இதனால் தூக்கத்தை தூண்டும் மெலடோனின் சுரக்காமல் இருக்கும். இதுவே பழக்கமானால் நமது உடலுக்கு தூக்கம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.
இரண்டாவது காரணம் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரம்.
தற்போதுள்ள இளைஞர்கள் பள்ளி கல்லூரி முடிந்த பின் பல பேர் விளையாட்டு மற்றும் ஆரோகியதிற்கு உடற்பயிற்ச்சி என்று செய்த முடித்த பிறகு அப்படியே அந்த நாளை முடிக்காமல் இரவில் சினிமா மற்றும் இரவில் ஊர் சுத்துவது போன்ற பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் சராசரியாக 11 மணிக்கு தூங்கி காலை 8 மணிக்கு எழுகின்றனர். இதனால் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சரியான சமயத்தில் செல்ல முடிவதில்லை இது அவர்களுக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று உணர்ந்து மூளை அவர்களை காலை விரைவாகவே எழ வேண்டும் என்ற ஒரு பயத்தை மனதில் ஏற்படுத்திவிடுகிறது. இது ஒரு நாள் என்றால் பரவாயில்லை ஆனால் இதுவே தொடர்கதை ஆனால் உடலில் மெலடோனின் சுரப்பு குறைந்து தூக்கம் இழந்து காணப்படுவீர்கள்.
இதே போல் இரவில் அலுவலகம் செல்பவர்கள் முடிந்த வரை பகல் நேரத்தில் தன்னை சுற்றி இருட்டாக அறையை வைத்து தூங்க முயலுங்கள், சராசரியாக 8 மணி நேரம் தூங்கினால் மட்டுமே உடல் ஆரோகியம் என்பது மேம்படும் இல்லையேல் பல பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும்.
ஆய்வாளர்களின் கருத்து: இரவில் தூங்கும்முன் அதாவது 30 நிமிடம் முன் திரைகளை அனைத்துவிட்டு தூங்க முயலுங்கள். மூளைக்கும் உடலுக்கும் அளிக்கும் ஓய்வே பல நோய்களுக்கு முற்று புள்ளி வைக்கும் மையமாக பின் மாறும்.
கீழ்கண்ட பதிவும் உங்களுக்கு பிடிக்கலாம் !